ரவீந்தர் மனைவியா இது.. செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் மகாலட்சுமியின் அழகிய போட்டோஸ்!
சென்னை: சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மகாலட்சுமி. அவரது இயல்பான நடிப்பு, அழகான தோற்றம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட பேச்சு ஆகியவை அவரை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமானவராக மாற்றியது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பெயருக்கேற்றவாறு அழகும் லட்சணமும் கொண்ட மகாலட்சுமி, சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை தொடங்கினார். அங்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் தன்னை மெருகேற்றிக் கொண்ட அவர், சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று சின்னத்திரையில் பிரகாசித்து வருகிறார். பல சீரியல்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

காதல் திருமணம்: மகாலட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கை ஒருகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்து, அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி, 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் மிக எளிமையாக, "காதும் காதும் வைத்தது போல" நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் வெளியானதும், இணையத்தில் பெரும் சர்ச்சையும் விவாதமும் எழுந்தது. இந்த திருமணத்தை விமர்சித்தவர்களும் குறைவில்லை. ஆனால், அனைத்து விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், மகாலட்சுமியும் ரவீந்தரும் தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அடிக்கடி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
என்ன அழகு: இந்த நிலையில், இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி, சமீபத்தில் சேலையில் மிகவும் அழகாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பாரம்பரிய உடையில் அவர் கம்பீரமாகவும், அழகாகவும் தோன்றுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "அழகுக்கு அழகு சேர்க்கும் சேலை", "சின்னத்திரையின் லட்சுமி" என வர்ணித்து, கவிதை பாடி கமெண்ட் செய்து வருகின்றனர். சில மணி நேரங்களிலேயே இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, டிரெண்டாகி வருகிறது. இதனால், மீண்டும் ஒருமுறை நடிகை மகாலட்சுமி ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











