ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா.. சில்க் ஸ்மிதா லுக்கிற்கு மாறிய ராக்ஷிதா மகாலட்சுமி!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6வது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி. இவர் எக்ஸ்ட்ரீம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை சில்க் ஸ்மிதா போல ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியல் மூலம் அறிமுகமான ரக்ஷிதா, பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி மிகவும் சந்தோஷமான ஜோடிகளாக இருவருமே வாழ்ந்த நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை. இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தை பெற்று கொள்ளாதது தான் இருவருக்கும் பிரச்சனை என்று கூறப்பட்டது.

Bigg Boss season 6 rachitha mahalakshmi latest instagram post

ராக்ஷிதா மகாலட்சுமி: இதையடுத்து, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. இவரை தொடர்ந்து, ராக்ஷிதாவின் கணவர் தினேஷூம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வைல்டு கார்டு போட்டியாளராக வந்தாலும், பைனல் வரை சென்றார். ஆனால், இவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை விஜே அர்ச்சனா பெற்றார்.

எக்ஸ்ட்ரீம்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, ராக்ஷிதா மகாலட்சுமிக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இயக்கும் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள எக்ஸ்ட்ரீம் படத்தில் ராக்ஷிதா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இதில், அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர் உட்பட பலர் நடித்துள்ளனர். டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ராஜ் பிரதாப் இசையமைக்கிறார். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Bigg Boss season 6 rachitha mahalakshmi latest instagram post

சில்க் ஸ்மிதாவா: இந்நிலையில்,நடிகை ராக்ஷிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மார்டன் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், அட சட்டுனு பார்த்த சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை ராக்ஷிதா மகாலாட்சு, இலங்கை ஜாப்னாவில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்காக அவர் போட்ட கெட்டப்பு இதுவாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X