Dharsha Gupta: எல்லாமே பச்சையா இருக்கு.. தர்ஷா குப்தாவின் போட்டோவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எப்போதும் அழுத முகத்துடன் இருந்த நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணமே இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருந்த அதிகமான பாலோவர் தான். அவர்களின் மனம் கஷ்டப்படும் படி, பிக் பாஸ் வீட்டில் சரியாக விளையாடாமல் வெளியே வந்த இவர், மீண்டும் இன்ஸ்டாவில் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது இவர் பகிர்ந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் அவரை கலாய்த்து வருகின்றனர்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் நடிகை தர்ஷா குப்தா அறிமுகமானார். அந்த சீரியலில் பாவாடை தாவணி, புடவையுடன் வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின், செந்தூரப்பூவே சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நடிகை தர்ஷா குப்தா: இன்ஸ்டாகிராமில் பிரபலமானதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். ஆனால், அங்கும் அவரால் திறன்பட செயல்பட முடியாமல் போனதால், போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர் ரிஷிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது இவர் யோகி பாபுவுடன் மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 8: இதையடுத்து, தர்ஷா குப்தா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு எப்படியாவது முன்னுக்கு வந்துவிடலாம் என்று பார்த்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், அவன் என்னை, இப்படி பேசிவிட்டான், இவள் எனக்கு சாப்பாடு தரவில்லை என அனைத்திற்கும் அழுதுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்குள் மேல் தர்ஷா குப்தாவின் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்கள், நீ பிக் பாஸ் வீட்டில் இருந்தது போதும் என மொத்தமாக வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

ஆடி மாத ஸ்பெஷலா: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியே வந்த தர்ஷா குப்தா, மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து தனது instagram பக்கத்தில், கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த ஒரே வாரத்தில் நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் வந்து, காயப்பட்டுப்போன தனது ரசிகர்களுக்கு ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து, தினம் தினம் ஏதாவது போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, பச்சை நிற உடையில், முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த இணையவாசிகள் என்னம்மா ஆடி மாத ஸ்பெஷலா என்றும், எல்லாமே பச்சையா இருக்கே என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ள மூன்று மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். இவர் பதிவிட்ட இந்த போட்டோவிற்கு லைக்குகளும்,கமெண்டுகளும் மலை போல் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











