Varshini Venkat: வியர்க்க விறுவிறுக்க ஜிம்மில் ஒர்க் அவுட்.. அசத்தும் பிக் பாஸ் நடிகை!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை வர்ஷினி வெங்கட். இவர் அந்த வீட்டில் குறைந்த நாட்களே இருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார். உடலை பிட்டாக வைத்து இருப்பதில் ஈடுபாடு கொண்ட வர்ஷினி, தாறுமாறாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
சென்னையில் பிறந்த மாடல் அழகியான வர்ஷினி வெங்கட். Mass Communication படித்து இருக்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், எப்போதும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து இருப்பதற்கான அவ்வப்போது உடற்பயிற்சி செய்வது இவரின் வழக்கம். தொகுப்பாளராக இருந்த இவர், பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றி, ஒரு சில விளம்பரததிலும் நடித்து இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கண்ணான கண்ணே" நடித்து பிரபலமானார். பிரித்வி ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த தொடர் இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான தொடராகும்.

வர்ஷினி வெங்கட்: இதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8ல் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். வீட்டிற்கு வந்த சில நாட்களிலே தனது கருத்தை தைரியமாக சொன்னார் வர்ஷினி. ஆனால், சௌந்தர்யா, ஜக்குலின், முத்துக்குமரன் போன்றவர்களுக்கு மக்களிடம் இருந்த ஆதரவால் அவரால் நிகழ்ச்சியில் தொடர முடியாமல் போனது. இதனால், வீட்டிற்கு வந்த மூன்றே வாரத்திலேயே அதாவது 21 நாளில், குறைந்த வாக்குகளை பெற்று வர்ஷினி வெங்கட் வெளியேறினார். பிக் பாஸ் கொடுத்த டிராபியை உடைத்துவிட்டு வெளியே வந்து விஜய் சேதுபதியிடம் பேசிய அவர், யாரையும் குறை சொல்லாமல், பிக் பாஸ் வீட்டில் மூன்று வாரம் இருந்ததே பெரிய விஷயமாக பார்க்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த மக்களுக்கு நன்றி என்றார். வழக்கமாக எலிமினேட்டாகி வெளியேறினார், இப்படி ஆகும் என நினைக்கவில்லை என கண்ணீர் விட்டு அழுது உள்ளே இருப்பவர்கள் சரியில்லை என்று குறை சொல்லுவார்கள். ஆனால், வர்ஷினி அப்படி செய்யமல் சிரித்த முகத்தோடு வெளியேறினார். இதைப்பார்த்த விஜய் சேதுபதி பாராட்டினார்.
அசத்தும் நடிகை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வர்ஷினி வெங்கட், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நடித்திருந்தார். சந்தானம் நடித்த 'டிடி' வரிசை திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றன. ஆனால், இந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெற இல்லை. தற்போது, வர்ஷினி வெங்கட் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். உடற்பயிற்சி மீது ஈடுபாடு கொண்ட இவர், பாதி நாளை ஜிம்மிலேயே செலவழித்து வருகிறார். வர்ஷினி வெங்கட் தற்போது, புதியதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதில், தனது வாழ்க்கையில் தினமும் நடப்பதை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் மலை போல் குறித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications