மஞ்ச காட்டு மைனாவாக மனதை வருடும் பிக் பாஸ் ஷெரின்!

சென்னை: துள்ளுவதோ இளமை, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர் நடிகை ஷெரின்.

பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பல லட்சம் ரசிகர்களின் மனங்களை வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போக இப்பொழுது மனதை வருடும் மஞ்சள் சேலையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி

வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி

கன்னட மொழியில் வெளியான போலீஸ் டாக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முறையாக திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஷெரின் தமிழ் சினிமாவிற்கு துள்ளுவதோ இளமை மூலம் அறிமுகமானார். தனுஷுக்கு ஜோடியாக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். துள்ளுவதோ இளமை வெளியான புதிதில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது

ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

துள்ளுவதோ இளமை கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் 1 மற்றும் விசில் உள்ளிட்ட படங்களில் நடிக்க அடுத்தடுத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றன. தொடர் ஹாட்ரிக் வெற்றிகளாக கொடுத்த நடிகை ஷெரின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையாததால் சிறப்பு தோற்றங்களிலும், ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போடும் நடிகையாகவும் வந்து சென்றார். அந்த வகையில் உள்ள நடிகர் விக்ரமுடன் இணைந்து பீமா திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு சென்றார்

Recommended Video

முழுக்க முழுக்க CAR ஐ மையப்படுத்திய படம் | Actress Aishwarya Rajesh Exclusive | Filmibeat Tamil
பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக

பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக

கடைசியாக நண்பேன்டா என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றவர் அடுத்து எந்த ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. இந்த நிலையில் ஷெரினை திரைப்படங்களில் காணமுடியாமல் ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக களமிறங்கினார். தனித்துவமான விளையாட்டின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதையும் வென்று போட்டியின் இறுதி வரை சென்றார்

மஞ்சள் சேலையில் மனதை வருடும் கவர்ச்சி

மஞ்சள் சேலையில் மனதை வருடும் கவர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல மடங்கு ரசிகர்களை கொண்ட ஷெரின் சமூக வலைதளங்களிலும் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மீண்டும் படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க பெயரிடப்படாத சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அடிக்கடி புகைப்படங்களையும் வாலுத்தனமான க்யூட் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இப்பொழுது மஞ்சள் சேலையில் மனதை வருடும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X