காதுல பூ.. நாக்க நீட்டி க்யூட் அள்ளுது.. ஷிவானி நாராயணன் சும்மா ஏஞ்சல் போல இருக்காரே!
சென்னை: சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அப்போதே 2 மில்லியன் ரசிகர்களை கொண்டிருந்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களையும் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு தற்போது 4 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுக்கும் இவருக்கும் ஒரு லவ் டிராக் ஓடியது. ஆனால், அதன் பின்னர் அது நட்பு டிராக்காக மாறிவிட்டது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அறிமுகமான ஷிவானி நாராயணன் தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் ஷிவானி: விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3வது மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமான ஷிவானி நாராயணன் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்த ஷிவானி 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி நடிப்பில் வெளியான பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

காதுல பூ: நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டால் வெயிட் போட்டதால் தான் பட வாய்ப்புகள் வரவில்லை என நினைத்து பலரும் ஸ்லிம்மாக மாறி வருகின்றனர். லாஸ்லியாவுக்கும் ஆரம்பத்தில் சில படங்கள் கிடைத்தன. ஆனால், அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போன நிலையில், தனது உடல் எடையை கணிசமாக குறைக்க ஆரம்பித்தார். அதே போலத்தான் ஷிவானி நாராயணனும் தொடர்ந்து ஒர்க்கவுட் செய்து தற்போது ஓடாக மாறியுள்ளார். அவரது காதின் மேல் பூ வைத்துக் கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

நாக்கை நீட்டி: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஷிவானி நாராயணன் ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வருகிறார். விளம்பரங்கள், கடை திறப்பு விழா உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருகிறார். நாக்கை நீட்டி செம க்யூட்டாக தேவதை போல அவர் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் கிடைத்து வருகின்றன. பம்பர் படத்திற்கு பிறகு சுமார் 1 வருடமாக புதிதாக எந்தவொரு படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கும் இவருக்கு சீக்கிரமே பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











