Shivani Narayanan: அந்த வாய கொஞ்சம் மூடுமா.. BMW பைக்கில் மாஸா போஸ் கொடுத்த ஷிவானி.. செம கலாய்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் சமீப காலமாக சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக போட்டோக்கள் போட்டே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டாலே ஜொள்ளு விடும் ரசிகர்களும் ட்ரோல் செய்யும் நெட்டிசன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்நிலையில், சற்று முன் BMW பைக்கில் அவர் செம மாஸாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட அதை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
மூன்றாவது மனைவி: சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்தார். மேலும், விஜய்சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்திலும் விஜய்சேதுபதியின் காவல் நிலையத்தில் போலீஸாக நடித்து இருந்தார். அந்த படத்தின் ஹீரோயினை விட இவர் அழகாக இருக்கிறார் என்றே ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்திருந்தனர்.
BMW பைக்கில் செம ஹாட்டாக ஷிவானி: பாலாஜி முருகதாஸ் உடன் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஷிவானி நாராயணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வித விதமாக ஹாட் போட்டோக்களை அடுக்கி வருகிறார்.
கல்யாண பெண் போல பிரைடல் லுக்கில் போஸ் கொடுத்து வந்த ஷிவானி தற்போது BMW பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு ஒயிட் ஷர்ட் மற்றும் பிரவுன் பேன்ட்டில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

வித விதமான போஸ்: அந்த பைக்கில் பின்னாடி பார்த்து அமர்ந்துக் கொண்டும் காலை தூக்கி வைத்து செம ஹாட்டாக போஸ் கொடுத்தும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார் ஷிவானி நாராயணன்.
புதுசா BMW பைக் வாங்கிட்டீங்களா? ஷிவானி என அவரது ரசிகர்கள் வாவ் போட்டு கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜிக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
அந்த வாயை மூடும்மா?: அதே நேரத்தில் ஷிவானியை இப்படி பார்த்ததும் கொஞ்சம் பொறாமையில் சில நெட்டிசன்கள் "அந்த வாயை மூடும்மா? என்றும் அது ஏன் பைக் வண்டியை விட்டு கீழ இறங்கு, ட்ரிப்பிள்ஸ் போலாமா செல்லம் என பலவிதமான கமெண்ட்டுகளை போட்டு ஷிவானியை கலாய்த்து வருகின்றனர்.

ஷிவானி அடுத்ததாக வெற்றியுடன் இணைந்து பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜி முருகதாஸ் உடன் ஷிவானி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்ற்னார்.


Click it and Unblock the Notifications











