அரை டவுசரும் இப்படி கிழிஞ்சிருந்தா எப்படிம்மா?.. பிக் பாஸ் ஷிவானியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடகடவென 5 படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென புதிதாக எந்தவொரு படங்களிலும் நடிக்காமல் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திக் கொண்டார். வெளிநாட்டுக்குச் சென்று படிக்கப் போவதாக சமிபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

கடந்த சில வாரங்களாக பெரிதாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்த ஷிவானி நாராயணன் தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Bigg Boss Shivani Narayanan ripped shorts photos trending in social media
Photo Credit:

3.9 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி நாராயணன் கூடிய சீக்கிரமே 4 மில்லியன் ஃபாலோயர்களை கடந்து விடுவார் என்றும் தொடர்ந்து இதே போல போட்டோக்களையும் வீடியோக்களையும் போடுங்க ஷிவானி என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 9: இந்த வருடம் அக்டோபருக்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் மாதமே வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன் எம்பியாகி விட்ட நிலையில், மீண்டும் பிக் பாஸ் பக்கம் எல்லாம் வரவே வாய்ப்பில்லை என்றும் இந்த சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் கசிந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 4ல் இளம் போட்டியாளராக கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தவர் தான் ஷிவானி நாராயணன்.

கிழிந்த டவுசரில் ஷிவானி நாராயணன்: ஜீன்ஸ் பேன்ட்டை கிழித்துவிட்டு முட்டித் தெரிய நடிகைகள் போட்டு வந்ததை பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது ஷிவானியால், கிழிந்த டவுசர் ஃபேஷனையும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த டவுசரை எல்லாம் எப்படி போடுவார்கள் என ஜீன்ஸ் ஷார்ட்ஸ் குறித்த வீடியோக்கள் வைரலான நிலையில், அப்படியொரு ஆடையை அசால்ட்டாக அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டி இளைஞர்களை இம்சித்து வருகிறார் இந்த பம்பர் பட ஹீரோயின்.

கலாய்க்கும் ஃபேன்ஸ்: சம்மருக்கு மெட்ராஸில் ஏற்ற ஆடையுடன் நல்லா காத்து வாங்கும் விதமாக ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு தலையில் கொண்டையை போட்டுக் கொண்டு இருப்பதே அலாதி என கேப்ஷன் கொடுத்த ஷிவானியை பார்த்து ரசிகர்கள் சம்மர் உங்களுக்கு இன்னுமா முடியல என்றும் அரை டவுசரையும் இப்படி அக்கு அக்கா கிழித்து போட்டுட்டு வந்திருக்கியேம்மா, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X