Don't Miss!
- News
உறுதியாக சொன்ன டிடிவி தினகரன்.. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அமமுகவை ஆதரிப்பாரா? அப்போ பாஜக? குழப்பம்!
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நீச்சல் குளத்தில் குட்டி உடையில்..ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி.. லட்சக்கணக்கில் குவியும் லைக்ஸ்!
சென்னை : திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம்.
படவாய்ப்புக்காக தேடி தேடி அலைந்து, பின் படம் வெற்றி பெற்று பிரபலமாவதை விட, இன்ஸ்டாவில் தினமும் கவர்ச்சி போஸ்ட் போட்டு விரைவில் பிரபலமாகிவிட்டார் ஷிவானி நாராயணன்.
ரசிகர்களை உசுப்பேத்தும் வகையில் தினமும் போஸ்ட் போடும் நம்ம ஷிவானி செல்லம், நேற்று ஒரு போஸ்டை போட்டு ரசிகர்களை கிறங்கடித்துவிட்டார்.
ஏஆர் ரஹ்மான் பங்கேற்ற மெக்சிக்கோ சினிமா விருந்து… கோவா திரைப்பட விழாவில் நடந்த சுவாரஸ்யம்

அழகு பதுமை
விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறமாதிரி போட்டோ, ரீல்ஸ் வீடியோவை போட்டு இணையவாசிகளை தன்பக்கம் வளைத்துப்போட்டார். இன்ஸ்டா ரசிகர்கள் இவரை செல்லமாக இன்ஸ்டா குயின் என வர்ணித்து வருகின்றனர்.

அடுத்த படங்களில்
சோஷியல் மீடியாவில் கிடைத்த வரவேற்பால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன ஷிவானி, இன்ஸ்டாவில் கலக்குவது போல கலக்குவாருனு பார்த்தா, பெருசா எதையும் செய்யாததால் எலிமினேட்டாகி பாதியிலே வெளியில் வந்தார். இதையடுத்து, ஷிவானி அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

வடிவேலுவுடன்
அது மட்டும் இல்லாமல் வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 9ந் தேதி வெளியாக உள்ளது.மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷிவானி. இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

பம்பர் படத்தில் ஹீரோயின்
ஷிவானி நாராயணன் தற்போது இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. கேரளா லாட்டரியை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது.

நீச்சல் குளத்தில்
இப்படி கணிசமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் ஷிவானி நாராயணன், தன்னை வாழவைத்த ரசிகர்களை மறக்காமல் தினமும் இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படத்தை அப்லோடு செய்து வருகிறார். தற்போது இவர் நீச்சல் குளத்தின் இருகே நின்று கொண்டு குட்டி உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அப்படியே நீச்சல் குளத்தில் குதிச்சி பிகினியில் போஸ் கொடுங்க என கேட்டு வருகின்றனர்.