Bigg Boss Shivin: என்ன ஷிவின் இதெல்லாம்.. கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிக் பாஸ் பிரபலம்.. எதுக்கு?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய திருநங்கை ஷிவின் படு கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி அதன் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஷிவினை ரசிகர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்த்து அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் ஏதும் குவியவில்லை.
இந்நிலையில், கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ள ஷிவின் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் ஷிவின்: கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவின் செம போல்டாக தனது விளையாட்டை விளையாடினார். அசீம், விக்ரமன் உள்ளிட்ட பல டஃப் போட்டியாளருக்கு சரியான டஃப் கொடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
ஷிவின் கணேசன் ரன்னர் அப் ஆவது வருவாரா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் செகண்ட் ரன்னர் அப் ஆனது சற்றே வருத்தத்தை அளித்தது. ஆனாலும், ஷிவினின் விளையாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு கிடைத்துள்ளது.
கவர்ச்சி உடையில் ஷிவின்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் பல பிரபலங்களும் பெரிய அளவில் பட வாய்ப்புகளோ, சீரியல் வாய்ப்புகளோ இல்லாமல் தவித்து வரும் போது இன்ஸ்டாகிராமில் இதுபோன்று கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிடுவதையே வேலையாக மாற்றி உள்ளனர்.
யாஷிகா ஆனந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், ஷிவானி நாராயணன், லாஸ்லியாவை தொடர்ந்து தற்போது ஷிவினும் தனது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

திட்டும் ரசிகர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக மாற்றத்திற்காக பாடுபட போகிறேன் என சொல்லிவிட்டு இப்படி நீங்களும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டால் எப்படி ஷிவின் என பிக் பாஸ் ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
உங்களை எங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்க்கிறோம், நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடியுங்கள், அதற்காக இப்படி உடலை காட்டியபடி போட்டோக்களை போட வேண்டிய தேவையில்லை என திட்டி வருகின்றனர்.

ஷிவின் ரசிகர்கள் உங்களுக்கு இந்த டிரெஸ் ரொம்ப அழகா இருக்கு என்றும் செம ஹாட்டா இருக்கு ஷிவின், நீங்க இந்த சம்மருக்கு பிகினி போட்டோ எல்லாம் போட மாட்டீங்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











