For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி

  |

  சென்னை : சேலத்தை சேர்ந்த பிரபல மாடலான சுருதி, தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகிறார்.அடிக்கடி வித்தியாசமாக போட்டோஷுட் நடத்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார்.

  Recommended Video

  Bigg Boss Ultimate Bala Suruthi மத்தியில் ஏற்பட்ட சண்டை | முன்னாடி Seasonல நீ ஒழுங்கா முற்றிய மோதல்?

  பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்ட சுருதி பெரியசாமி, அந்த நிகழ்ச்சியில் டாஸ் இல்லாத சமயத்தில் தாமரையின் காயினை திருடிய விவகாரத்தில் சிக்கி சர்ச்சையை சந்தித்தார். பல நாட்கள் சர்ச்சைகளில் சிக்கிய சுருதி பாதியிலேயே குறைவான வாக்குகளோடு வெளியேறினார். ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார்.

  இதன் பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் மிகவும் சாமர்த்தியமாக விளையாடி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.விளையாட்டு வீராங்கனையும், மாடலுமான சுருதி பெரிய சாமி மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி தற்போது மாடலிங் துறையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

  இத்தனை ஆண்டுகால தாம்பத்யம்.. மகனிடம் கொட்டித் தீர்த்த பாக்கியா! இத்தனை ஆண்டுகால தாம்பத்யம்.. மகனிடம் கொட்டித் தீர்த்த பாக்கியா!

  கண்கலங்க வைத்த சுருதி

  கண்கலங்க வைத்த சுருதி

  இந்த நிகழ்ச்சியில் தன்னை பற்றி அறிமுகம் செய்த போது, சுருதியின் கதையை கேட்டு அனைவரும் கண் கலங்கினர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்த சுருதி, ஆரம்பத்தில் கருப்பாக இருந்த காரணத்தால் பல விமர்சனங்களுக்கு ஆளானார். அதே சமயம் சாமி உருவங்களுக்கு மாடலாக இவர் கொடுத்த போஸ், அவருக்கு மாடலிங் உலகில் வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும் பெற்று வந்தது.

  ஒரு வாய்ப்பு கூட கிடைக்கலியே

  ஒரு வாய்ப்பு கூட கிடைக்கலியே

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்பிற்காக கடுமையாக முயற்சி செய்து வரும் சுருதி, சேலை, பாவாடை தாவணியில் துவங்கி 2 பீஸ் உடை ஆகியவற்றை அணிந்து தினுசு தினுசாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி வருகிறார். ஆனால் தற்போது வரை இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

  த்ரிஷாவுக்கே டஃப் கொடுத்தார்

  த்ரிஷாவுக்கே டஃப் கொடுத்தார்

  இருந்தாலும் சோஷியல் மீடியால் அனைவரையும் கவரும் வகையில் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ள குந்தவை கெட்அப்பில் போட்டோஷுட் நடத்தி இவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகியது.த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, இவரது தோற்றம் உள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர். குந்தவையாக போஸ் கொடுத்ததுடன் குந்தவையின் அழகையும் வர்ணித்து கேப்ஷன் பதிவிட்டிருந்தார்.

  யானையுடன் போட்டோஷுட்

  யானையுடன் போட்டோஷுட்

  தற்போது அடுத்த கட்டமாக யானையுடன் போட்டோஷுட் நடத்தி உள்ளார். ராணி போன்ற கெட்அப்பில் யானையுடன் செம கேஷுவலாக இவர் கொடுத்துள்ள போசிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. எப்படி பயப்படாம யானை கூட நிற்கிறீங்க. இது இப்போ எடுத்ததா இல்லை பழைய போட்டோக்களா என சிலர் சந்தேகமும் எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பும் சுருதி இதே போல் போட்டோக்களை பிக்பாஸிற்கு செல்வதற்கு முன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  யானைக்கு இவ்வளவு அழகா அறிமுகமா

  யானைக்கு இவ்வளவு அழகா அறிமுகமா

  யானையுடன் போஸ் கொடுத்தது மட்டுமல்ல, யானை பற்றிய அறிமுகத்தையும் வர்ணனையுடன் கேப்ஷனாக வெளியிட்டுள்ளார் சுருதி. அதில், லட்சுமி அவ்ளோ அழகு , பர்த்தாவுடனே அப்படி ஒரு ஈர்ப்பு அவளிடம் .. அவளுக்கும் அப்படி தான் என்று நினைக்கிறேன். அந்த கண்களில் நான் பார்த்தது ,நான் அவளுடன் இருந்த சில மணி நேரம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக என்னுடனே இருக்கும். லட்சுமியும் நானும்.

  English summary
  Bigg boss tamil season 5 fame Suruthi Periyasamy latest photoshoot with elephant stunning social media. Recently she posed like Trisha as Ponniyin Selvan Kundhavai.This photo also goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X