Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஷெரினுக்காக பச்சை மிளகாயா.. இதெல்லாம் டூ டூ மச்.. பிக் பாஸை திட்டித்தீர்க்கும் தர்ஷன் ரியல் காதலி!
Recommended Video
சென்னை: தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி பிக் பாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கருதப்படுபவர் தர்ஷன். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதனை சிரத்தையாக செய்து முடிப்பவர், நடுநிலையானவர் என்ற நல்ல பெயர் அவருக்கு இருக்கிறது. எனவே இவர் தான் டைட்டில் வின்னர் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் ஷெரினுக்கும் இவருக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு உள்ளது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே நடிகை சனமும், தர்ஷனும் காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

தர்ஷனின் காதலி
எனவே தர்ஷன் மீது தனக்கொரு ஈர்ப்பு இருப்பதாகச் சொன்னாலும், அதனை அடுத்த கட்டத்திற்கு ஷெரின் எடுத்துச் செல்லவில்லை. தர்ஷனும் அவரிடம் நட்பு ரீதியாகவே பழகுகிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், சனம் ஷெட்டிக்கு இது பிடிக்கவில்லை.

பரபரப்பு வீடியோ
தர்ஷனை பிரிய தான் தயாராக இருக்கிறேன் என கதறி அழுதபடி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சனம். இனி தர்ஷனுடைய நல்ல எதிர்காலத்திற்கு தான் இடையூறாக இருக்கப் போவதில்லை என அழுது கொண்டே அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

தர்ஷன் பிறந்தநாள்
இதனிடையே தர்ஷனின் பிறந்தநாளையொட்டி சனம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தர்ஷனின் பிறந்தநாளுக்காக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கேக் வெட்டியதாகவும், ஆனால் அந்த வீடியோவை நிகழ்ச்சியில் ஒளிபரப்ப விஜய் டிவி மறுத்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

பச்சை மிளகாய் டாஸ்க்
இதனால் சனத்துக்கும், விஜய் டிவிக்கும் இடையே பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பச்சை மிளகாயை வைத்து ஹவுஸ்மேட்சை கதறவிட்டார் பிக் பாஸ். சக போட்டியாளர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் பச்சை மிளகாய்யை அப்படியே கடித்து சாப்பிட வேண்டும் என அறிவித்தார். இதையடுத்து போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை காப்பாற்ற பச்சை மிளகாய் தின்றனர்.
நியாயமே இல்லை
பிக் பாஸின் பச்சை மிளகாய் டாஸ்க்குக்கு தர்ஷனின் காதலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "தர்ஷனின் உடல்நிலையை இது கடுமையாக பாதிக்கும். பிக் பாஸ் இது நியாயமே இல்லை. இதை என்னால் பார்க்க முடியாது", என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப ஓவர்
ஆனால் சனத்தின் இந்த பதிவை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். "ஒரு பச்சை மிளகாய் திங்கிறதால என்ன ஆகப் போகுது. ரொம்ப ஓவர் மா உனக்கு. அவரே எதுவும் கண்டுக்காம ரெண்டாவது மிளகாய திங்கிறாரு. அப்புறம் உனக்கு என்ன", என ஒருவர் கேட்டுள்ளார். ஆனால் சனத்தின் உண்மையான கோபத்துக்கு காரணம் ஷெரினுக்காக அவர் பச்சை மிளகாய் சாப்பிட்டது தான் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.