மடியில் புலிக்குட்டியை படுக்க வைத்து பால் ஊட்டும் பிக்பாஸ் கெமி.. ஆத்தாடி இம்புட்டு தைரியமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இல் போட்டியாளராக கலந்து கொண்டவர்களின் கெமி மிகவும் முக்கியமானவர். இவர் தனது தைரியமான பேச்சு மிகவும் உறுதியான ஆட்டத்தால் ரசிகர்கள் பலர் கவனத்தை ஈர்த்தார். இது மட்டுமில்லாமல் இவர் தன்னைப் பற்றி பேசுகையில், தன்னை பலரும் ஆண் என்றும் பெண் இல்லை என்றும் விமர்சித்ததாக மன வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது கண்கலங்கி கொண்டு ஒரு குடும்பத்தை குறிப்பாக அப்பா இல்லாத குடும்பத்தை மிகவும் கவனமாகவும் அக்கறையாகவும் பார்த்துக் கொள்ளக்கூடிய அதற்கு ஆம்பிளை தனம் என்றால் என்றால் இந்த கெமியும் ஒரு ஆண் தான் என்று ஆணித்தரமாக அழுது கொண்டே கூறினார்.

அதேபோல் பிக்பாஸில் அவரது தைரியமான ஆட்டம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக சக போட்டியாளர்களுக்கு ஏதாவது ஒரு தடங்கல் அல்லது தேவை இருந்தால் உடனடியாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் போட்டியாளர்களில் ஒருவராக கெமி இருந்தார். பல இடங்களில் அவரது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றார். டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக கெமி வருவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கு முன்பாகவே எலிமினேட் ஆனார்.

Bigg Boss Tamil 9 Contestant Kemi s Bold Side Wins Hearts Feeds Tiger Cub Shares Viral Photos amp amp Videos

கவின் படம்: தற்போது அவர் கவின் மற்றும் நயன்தாரா நடித்த ஹாய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பாக கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது கிஸ் படத்தின் புரோமோஷனுக்காக வந்த போது தெரிவித்தார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் தனது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடிய கெமி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலிகள் உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார்.

புலிக்குட்டிக்கு பால்: அதில் ஒரு புலிக்குட்டியை அவரது மடியில் படுக்க வைத்து பால் புட்டியில் பாலூட்டிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மேலும் மிகப்பெரிய புலி ஒன்றின் அருகில் அமர்ந்து, அதை தடவி கொடுத்து புகைப்படமும் வீடியோவும் எடுத்துள்ளார் அதையும் பகிர்ந்துள்ளார். கெமி பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த பலரும் கெமிக்கு ரொம்ப தான் தைரியம் போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படங்களில் மற்றும் வீடியோக்களில் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X