பிக் பாஸ் ரைசா வில்சன் ஞாபகமிருக்கா?.. ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் வேறலெவல்.. கம்பேக் கொடுப்பாரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் உடை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
லப்பர் பந்து படத்தின் மூலம் ஹரீஷ் கல்யாண் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக அவர் நடிப்பில் டீசல் படம் வெளியாக காத்திருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் ரைசா வில்சனுடன் இணைந்து நட்பாக பழகி வந்த ஹரிஷ் கல்யாண் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
ஹரிஷ் கல்யாண் ஜோடி: தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து தனுசு ராசி நேயர்களே படத்திலும் அவர் நடித்திருந்தார். இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், ஹரிஷ் கல்யாண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 35 வயதாகும் ரைசா வில்சன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

ஓவியாவை போல: பிக் பாஸ் முதல் சீசன் மூலம் ஓவியா மற்றும் ரைசா வில்சன் இருவரும் பிரபலமானார்கள். யார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு தயிர் சாதம் நடிப்பில் வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், நடிகை ஓவியாவை போலவே இவரும் மார்க்கெட் இழந்து கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஒன் சைட் ஸ்லீவ்லெஸ் டிரஸ்: தனது முகத்துக்கு செய்த பிளாஸ்டிக் சர்ஜரி சொதப்பிய நிலையில் பல பட வாய்ப்புகளை இழந்தார். பீச் ரெசார்ட்டில் கவர்ச்சி பொங்க ரைசா வில்சன் வெளியிட்ட வீடியோவில் ஒன் சைட் ஸ்லீவ் டிரஸ் உடன் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் படம் என்ன ஆச்சு?: காதலிக்க நேரமில்லை படத்தைப் போல காதலிக்க யாரும் இல்லை என்கிற படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ரைசா வில்சன் கடைசியாக நடித்து வந்தார். ஆனால், அந்த படம் என்ன ஆனது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. தி சேஸ் எனும் தெலுங்கு படமும் இவர் நடிப்பில் உருவாகி சில வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தமிழ் சினிமாவில் இவர் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











