அடச்சீ.. கையில் சரக்கு பாட்டில்.. உடையை காற்றில் பறக்க விட்டு குத்தாட்டம் போட்ட கிரண்!
சென்னை: நம்ம தமிழ் ஆடியன்சுக்கு ஒல்லி பெல்லி இடுப்பைவிட, சும்மா கொழுக்கு மொழுக்குனு இருந்தால் ரசித்து ரசித்துப் பார்ப்பார்கள். இதனால் தான், கோலிவுட்டுக்கு வட மாநிலங்களிலிருந்து ஹீரோயின்கள் வருவது வழக்கமாக இருந்தது. அப்படி தமிழ் சினிமாவிற்கு படையெடுத்து வந்தவர்கள் ஜோதிகா, சிம்ரன், நமீதா அந்த வரிசையில், அழகு பதுமையாக வந்து இறங்கிய கிரண், தற்போது மார்க்கெட் இல்லாததால் கவர்ச்சி புயலாக மாறி இணையத்தை அலறவிடுகிறார்.
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் க்யூட்டாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர் திரைப்படத்திலும் கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பின் நல்ல கதைகளை தேர்வு செய்யாததால் சினிமாவிற்கு வந்த சீக்கிரத்திலேயே இவருக்கு படவாய்ப்பு இல்லாமல் போனது.

நடிகை கிரண்: இதன் பின் படவாய்ப்பு தேடி டோலிவுட், பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு,அங்கேயும் எந்த வாய்ப்பும் கிடைக்காததால், தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக இறக்குமதியானார். வந்த வேகத்திலேயே, விஜய் நடத்த திருமலை படத்தில் இடுப்பை காட்டி 'மலையாள பகவதி வந்து இருக்கேன் குறிசொல்லட்டுமா' என்று, கவர்ச்சியில் தூக்கலாக ஆட்டம் போட்டார். இவர் கவர்ச்சி காட்ட ரெடியாக இருந்த போதும், கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இவருக்கு படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை.
கையில் சரக்கு பாட்டில்: இதையடுத்து அண்மையில் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு போன வேகத்தில் திரும்பி வந்தார் கிரண். தெலுங்கு பிக்பாஸில் கவர்ச்சியுடன் அலைந்த நடிகை கிரண் பல நாட்கள் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே வாரத்திலேயே சோலியை முடித்து அனுப்பிவைத்தனர் தெலுங்கு பேன்ஸ். இதனால், மீண்டும் இணையத்தில் கவர்ச்சி தரிசனத்தை காட்ட தொடங்கிய கிரண், தற்போது கையில் சரக்கு பாட்டிலை வைத்துக்கொண்டு, போட்டு இருக்கும் ஒரே ஒரு உடையையும் காற்றில் பறக்க விட்டு,கவர்ச்சி தரிசனம் கொடுத்து, குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இவங்கள திருத்தவே முடியாது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வளவு ஓபனாவா பேசுவது: நடிகை கிரண் அண்மையில் தெலுங்கு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண்களை ஆண்கள் பார்க்கும்போது அவர்களது கண்கள் பெண்களின் முன்னழகுக்குதான் போகும். நான் ஆண்களை பார்க்கும்போது அவர்களுடைய புஜத்தை பார்ப்பேன் என்று ரசிகர்களை அலறவிட்டார் நடிகை கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











