வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப்க்கு கன்டென்ட்..கேள்வி கேட்ட கஸ்தூரி..பதிலடி கொடுத்த வனிதா!

சென்னை: வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி தாறுமாறான கேள்விகளை கேட்டதற்கு வனிதா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமார், தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார்.

கடந்த வாரம் இவர், மர்ம நபர் ஒருவர் தன்னை ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை தாக்கியதாக புகைப்படத்துடன் கூறியிருந்தார்.

Bigg boss Vanitha Vijayakumar has reply to actress Kasthuris question
நடிகை வனிதா: இதையடுத்து, தாக்கப்பட்டது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த வனிதா, ஒரு நடிகைக்கு முகம் தான் முக்கியம், இருந்தாலும், நான் தாக்கப்பட்டது அனைவருக்கும் தெரியவேண்டும் என்று தான் அந்த போட்டோவை ஷேர் செய்தேன். அதே போல பலர் அது பொய் என்று சொன்னார்கள், பலர் என்ன என் குடும்பத்தினரும் கூட என்னை நம்பல.

ஆம்பளையாக இருந்தா: என்னை தாக்கிய மர்ம நபர் கேமராவில் வேண்டுமானால், சிக்காமல் இருக்கலாம். ஆனால், உண்மையான ஆம்பளையாக இருந்தா, ஓடிஒளியாமல், காவல் நிலையத்தில் சரண் அடைந்து தாக்கியதை ஒத்துக்கொள் நான் உன்னை மன்னித்துவிட்டு விடுகிறேன் என்று வனிதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

ருசிகரமான பொய்கள்: இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப் க்கும் விஜய் டிவிக்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா?

Bigg boss Vanitha Vijayakumar has reply to actress Kasthuris question
கஸ்தூரி சராமாரியான கேள்வி: மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் கெரோ செய்தது நினைவுக்கு வருகிறது. இது வெறும் விளையாட்டு என்று அப்போது தெரியவில்லையா? நீங்கள் மட்டுமல்ல, யாருமே வன்முறைக்கு தகுதியானவர்கள் இல்லை என்று நடிகை கஸ்தூரி சராமாரியான கேள்வி கேட்டு இருந்தார்.

நான் ஒரு திறந்த புத்தகம்: இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் ஒரு திறந்த புத்தகம். இந்த உலகத்தில் நான் எதையும் மறைக்கவில்லை. நான் மிகவும் நேர்மையானவள். எது நோய் என்று உங்களுக்கு தெரியும், கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டு இருக்கிறார். இருவரும் மாறி மாறி ட்விட்டரில் மோதிக் கொள்வது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X