ஆத்தாடி.. இது ரொம்ப க்யூட்.. நடிகை யாஷிகா ஆனந்த் எப்படி இருக்காரு பாருங்க!
சென்னை: மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் வந்து பிரபலமானர்வர்களில் ஒருவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோ லைக்குகளை பெற்று வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அரையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தினை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார். பின், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குட்டி குட்டி கவர்ச்சி ஆடைகளை அணிந்து, டீன் ஏஜ் பாய்ஸின் பேவரைட் ஹீரோயினாக மாறினாலும் அவரால், வெற்றிப்பெற முடியவில்லை. 98 நாட்கள் இருந்த யாஷிகா 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

யாஷிகா ஆனந்த்: இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா, 2021 கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய யாஷிகா படுத்த படுக்கையாக பல மாதங்கள் இருந்தார். விபத்து நடந்த போது யாஷிகா தான் கார் ஓட்டி வந்தால், இதுகுறித்த வழக்கு விசாரணையில் உள்ளது. அதன்பின் அதிலிருந்து மீண்டு குணமடைந்த யாஷிகா தீவிர சிகிச்சைக்கு பின் திரும்பவும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீம், சல்ஃபர் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர், ஏற்கனவே எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆத்தாடி செம க்யூட்: தற்போது, சோஷியல் மீடியாவில் மூச்சு முட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக் கூடிய யாஷிகா ஆனந்த், கடந்த வாரம், இழுத்துப்போர்த்திக் கொண்டு பாவாடை தாவணியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் மலை போல் குவிந்த நிலையில், தற்போது, டைட்டான உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஆத்தாடி என்ன அழகும் என்றும், இது ஹாட் இல்ல.. ரொம்ப க்யூட், என்று அந்த போட்டோவிற்கு கீழே கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











