குதிரையுடன் மல்லுக்கட்டும் யாஷிகா ஆனந்த்... போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகையும் மாடல் அழகியுமான யாஷிகா ஆனந்த், கடற்கரையில் குதிரையுடன் எடுத்துக் கொண்ட விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்டைலான உடை அணிந்து, இயற்கை பின்னணியில் குதிரையுடன் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள், வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய யாஷிகா ஆனந்த், ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்தார். அதன் பின்னர், 2017ஆம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்துபடத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அதன்பின் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த், பெரும் அளவில் ரசிகர்களிடையே அறிமுகமானார். நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய பேசியதும், அவரின் தைரியமும் அவருக்கு என்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. பிக் பாஸ் பிறகு, அவர் நடித்த படங்களும், சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றன.

நடிகை யாஷிகா ஆனந்த்: ஒரு கட்டத்தில், யாஷிகா ஆனந்த் ஒரு சாலை விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுக்குள்ளானார். அந்த விபத்து அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு, மனதளவிலும் உடலளவிலும் மீண்டு வந்து, மீண்டும் தனது தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த அனுபவங்கள் அவரை மேலும் உறுதியான மனிதராக மாற்றியது.

குதிரையுடன் மல்லுக்கட்டும் யாஷிகா: தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பைத் தவிர, மாடலிங், போட்டோஷூட் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கிறார். கடற்கரையில் வெள்ளை குதிரையுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறது. இந்த புகைப்படங்களில் யாஷிகா ஆனந்த் காட்டிய தன்னம்பிக்கையும், அவரது மாடல் அனுபவமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. "யூனிக் கான்செப்ட்", "ஸ்டைலிஷ் லுக்" போன்ற கருத்துகளை சில ரசிகர்கள் பதிவிட்டு வந்தாலும், சிலர் குதிரையுடன் மல்லுக்கட்டும் யாஷிகா என பதிவிட்டு அவரை கேலி செய்து வருகின்றனர். இருந்த போதும், அந்த போட்டோக்களுக்கு லைக்களும் , கமெண்ட்களும் வேகமாக அதிகரித்து வருவதால், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











