பாடகியாக அறிமுகமாகும் நடிகை லாஸ்லியா... எந்த படத்தில் தெரியுமா!
சென்னை : அறிமுக இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரின் இயக்கத்தில் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாகவும் லாஸ்லியா ஹீரோயினாகவும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியா இதே படத்தில் பாடல் ஒன்றைப் பாடி பாடகியாகவும் அறிமுகமாகிறார்.

துறுதுறுப்பான விளையாட்டு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு அறிமுகமான நடிகை லாஸ்லியா இப்பொழுது அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பிக் பாஸ் சீசன் 3 அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த சீசனாக இருந்தது இதில் பெண் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா தனது துறுதுறுப்பான விளையாட்டின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

கதாநாயகியாக அறிமுகமாகிறார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருபுறம் ஜாலியான பெண்ணாக மறுபுறம் கவினை காதலித்து சென்டிமென்டாக அனைவரையும் டச் செய்த லாஸ்லியா இப்பொழுது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்னீக் பீக்
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் காமெடி வேடத்தில் சதீஷ் நடித்து வருகிறார். அனைத்து கட்ட பணிகள் முடிந்து இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்க சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது.

பாடகியாக அறிமுகமாகிறார்
செய்திவாசிப்பாளர்,பிக் பாஸ் போட்டியாளர்,ஹீரோயின் என சினிமாவில் கால் தடத்தை பதிக்க ஆரம்பித்து இருக்கும் லாஸ்லியா அறிமுகமாகும் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகிறார். அந்த வகையில் ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் இடம்பெறும் அடிச்சி பறக்க விடுமா என்ற பாடலை இசையமைப்பாளர் தேவா உடன் இணைந்து லாஸ்லியா பாடிய சினிமாவில் பாடகியாகவும் அறிமுகமாகிறார்.


Click it and Unblock the Notifications











