Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அட.. பிக்பாஸ் ஜூலிக்கு இப்படியொரு ஃபேனா.. போட்டோவை பூஜையறையில் வைத்து வழிபாடு.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை ஜூலியின் போட்டோவை பூஜையறையில் வைத்து ரசிகர் ஒருவர் வழிபாடு செய்யும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனவர் ஜூலி. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி ஏராளமான பொய்களை சொன்னதோடு, நடிகை ஓவியாவையும் கார்னர் செய்தார். இதனால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார்.
டோலா ரே டோலா, ஏக் தோ தீன்.. மாஸ்டர்ஜி சரோஜ் கானின் மறக்க முடியாத ஆர்ப்பாட்ட நடனங்கள்!
பிறந்தநாள்
ரசிகர்களின் கடுமையான கோபத்திற்கு ஆளானார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஜூலிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை ஜூலி கடந்த 28ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
போட்டோவை வழிபாடு
அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது தீவிர ரசிகரான ஒருவர் ஜூலியின் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். அதில் பூஜையறையில் சாமி போட்டோக்களுக்கு சமமாக ஜூலியின் போட்டோவையும் வைத்து வழிபாடு செய்துள்ளார். போட்டோவுக்கு பூக்கள் வைத்து, விளக்கேற்றி வேற லெவலில் கொண்டாடியுள்ளார்.
வாழ்த்துகள் தலைவி
மேலும் செல் போனின் பின்பக்க பேனலிலும் அவரது படத்தை வைத்துள்ளார். அதோடு ஜூலியின் டை ஹார்டு ஃபேன் என்றும் பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவி என்றும் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பார்க்க சகிக்கல
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர். ஒரு அளவு வேண்டாமா என்றும் ஜூலி இதுபோன்று செய்ய சொன்னாரா என்றும் கேள்வி கேட்டு நச்சு பண்ணி வருகின்றனர். பலர் பார்க்க சகிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.