அட.. பிக்பாஸ் லாஸ்லியாவா இது.. சேலையில் செம ஸ்லீம்மா சிக்குன்னு இருக்காரே.. அசந்துப்போன நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை லாஸ்லியா சேலையில் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அசந்துப் போயுள்ளனர்.
Recommended Video
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான கவினை காதலித்தார். லாஸ்லியாவின் பெற்றோர் கவினுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதல் முறிந்துவிட்டதா?
இருப்பினும் நிகழ்ச்சி முடியும் அவருடன் நெருக்கமாக இருந்தார் லாஸ்லியா. ஆனால் அதன் பிறகு பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில் கவினை தவிர்த்தார். இதனால் அவர்களுக்குள்ளான காதல் முறிந்துவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இரண்டு படங்கள்
ஆனால் அதற்கெல்லாம் பதிலே சொல்லாமல் தவிர்த்து வந்தார் லாஸ்லியா. இந்நிலையில் ஹர்பஜன் சிங், அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ஃபிரன்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா. இதேபோல் ஆரி- ரைஸா வில்சன் நடிக்கும் படத்திலும் லாஸ்லியா நடிப்பதாக கூறப்படுகிறது

பிஸியாக உள்ள லாஸ்
இந்த படங்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கூட அண்மையில் வெளியானது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என பிஸியாக உள்ள லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோக்களை கேப்ஷனுடன் ஷேர் செய்து வருகிறார்.

க்யூட் போட்டோ ஷுட்
அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் நடிகை லாஸ்லியா, லெமன் யெல்லோ நிற சேலையில் செம க்யூட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். ஃப்ளைனாக உள்ள அந்த சேலையில் லூஸ் ஹேர் விட்டப்படி அவுட்டோரில் போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளார்.

சிக்கென ஸ்லீமாக
மாராப்பை விலக்கி முன்னழகை காட்டியப்படியும் திரும்பி நின்று பின்னழகை காட்டியப்படியும் போஸ் கொடுத்துள்ளார். மேலும் உட்கார்ந்தப்படியும் க்ளோஸப்பில் எட்டிப் பார்ப்பது போன்றும் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களில் லாஸ்லியா எடையை குறைத்து சிக்கென ஸ்லீம்மாக இருக்கிறார்.

இறங்கிவந்த ஏஞ்சல்
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், செம க்யூட், கார்ஜியஸ் என புகழ்ந்து தள்ளியுள்ளனர். சில நெட்டிசன்கள் அழகிய தமிழ் மகள் இவள் என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் இந்திய இளவரசி போன்று இருக்கிறீர்கள், சில நேரங்களில் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவைதையை போல் இருக்கிறீர்கள் என்றும் உருகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











