செம ஸ்டைலாக மாறிய லாஸ்லியா... யாருக்கூட சேர்ந்து போஸ் கொடுத்திருக்காரு பாருங்க.. வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகை லாஸ்லியா மாடர்ன் லுக்கில் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராக இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த லாஸ்லியா சக போட்டியாளரான நடிகர் கவினை காதலித்தார். லாஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் கூட கவின் உடனான காதலை கைவிடவில்லை லாஸ்லியா.

கவினுடன் காதல்..

கவினுடன் காதல்..

தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. ஆனால் அதன்பிறகு வேறு ஒருவரை காதலிப்பதாகவும் இதனால் லாஸ்லியா தனது காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. அதேநேரத்தில் கவின் - லாஸ்லியா காதலுக்கு சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு இருந்தது.

படங்களில் பிஸி

படங்களில் பிஸி

இருவரின் சமூக வலைதள பக்கங்களிலும் கமெண்ட் பதிவு செய்யும் நெட்டிசன்கள், இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இருவருமே தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை. இருவரும் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளனர்.

கூகுல் குட்டப்பா படம்

கூகுல் குட்டப்பா படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா நடிப்பில் ஃபிரண்ட்ஷிப் என்ற படமும் கவினின் நடிப்பில் வெளியாகியுள்ளது. தற்போது லாஸ்லியா கூகுல் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார் லாஸ்லியா.

படு மாடர்னாக மாறிய லாஸ்லியா

படு மாடர்னாக மாறிய லாஸ்லியா

இந்தப் படத்தை பிரபல இயக்குநரான கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள லாஸ்லியா அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது லாஸ்லியா ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் நடிகை லாஸ்லியா படு மாடர்ன் லுக்கில் உள்ளார்.

Recommended Video

Losliya Exclusive Interview | Fans எனக்கு Unconditional Love குடுக்குறாங்க | Friendship
ஒரு வழியா போஸ்ட பண்ணிட்டீங்களே

ஒரு வழியா போஸ்ட பண்ணிட்டீங்களே

ஹேர் ஸ்டைல், டிரெஸ் என அனைத்தும் மாறி ஆளே வேறு மாதிரி உள்ளார். அதோடு அந்த போட்டோவில் தர்ஷனுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை லாஸ்லியா. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பியூட்டிஃபுள் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு வழியா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டோ போட்டீங்கள்ல என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X