இதுக்குத்தான் இவ்ளோ பெரிய பில்டப்பா.. காதலரை அறிமுகம் செய்த ரைசா! எல்லாம் எதுக்கு தெரியுமா?

Recommended Video

லவ்வர்ஸ் டே-யில் காதலரை அறிமுகம் செய்த ரைசா! எல்லாம் எதுக்கு தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை ரைசா, காதலர் தினமான இன்று தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் அறிமுகமான வால்டர் பிலிப்ஸ் தான் தன்னுடைய காதலர் என அறிமுகப்படுத்தியுள்ள, ரைசா, இருவரும் இணைந்து ஹாஷ்டேக் லவ் என்ற படத்தில் நடிக்கப் போவதையும் தெரிவித்துள்ளார்.

Biggboss Raiza reveal her releationship status!

இது ரியல் ஜோடி தானா? இல்லை; ஹாஷ்டேக் காதல் படத்திற்கான ரீல் ஜோடியா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஹரிஷ் கல்யாணுடன் ரொம்ப க்ளோஸாக பழகி வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்திலும் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார்.

பியார் பிரேமா காதல் படத்தைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்திலும், கிளைமேக்ஸில் ஹரிஷுக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்திருந்தார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் காதலித்து வருவதாகவும், வதந்திகள் பரவின.

காதலர் தினத்தன்று தனது காதலரை ரைசா அறிமுகப்படுத்த உள்ளதாக ஜி.வி. பிரகாஷ், ஓவியா, நிஷா உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோ ட்வீட் போட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது தனது காதலர் இவர் தான் வால்டர் பிலிப்ஸை ரைசா அறிமுகப்படுத்தியுள்ளார்.

அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்த போஸ்கோ இயக்கத்தில் உருவாகவுள்ள ஹாஷ்டேக் லவ் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X