கமல் ஸ்டைலில் கண்ணடிக்கும் ஷிவானி.. லைட்டா லாஸ்லியா சாயல் தெரியுதே.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: கமல் ஸ்டைலில் பிக்பாஸ் ஷிவானி கண்ணடிக்கும் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

ஆட்டம் ஆரம்பம் Housemates Targeted Shivani • Promo 2

சின்னத்திரை நடிகையும் மாடலுமான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஆரம்பம் முதலே இவர் பிக்பாஸில் பங்கேற்பதாக தகவல் பரவிய நிலையில் ஒரு வழியான ஹாட் பர்ஃபாமன்ஸுடன் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் நடிகை ஷிவானி.

கார்னர் செய்யப்படும் ஷிவானி

கார்னர் செய்யப்படும் ஷிவானி

ஆனால் பிக்பாஸின் முதல் நாளிலேயே அவரை ஹவுஸ்மேட்ஸ்கள் கார்னர் செய்வது விஜய் டிவி வெளியிட்ட புரமோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் ரவுண்டு கட்டி அவரை டார்கெட் செய்கின்றனர்.

பழித்து காட்டும் சுரேஷ்

பழித்து காட்டும் சுரேஷ்

குறிப்பாக சனம் ஷெட்டியும், சுரேஷ் சக்ரவர்த்தியும் கொஞ்சம் அதிகமாகவே பேசுகின்றனர். அதிலும் நடிகர் சுரேஷ், என்ன இது மூஞ்சு உம்முன்னு என பழித்து காட்டுகிறார். இதனால் எடுத்த எடுப்பிலேயே ஹேட்டர்ஸை சம்பாதித்து விட்டார் சுரேஷ்.

சோகமே உருவாய்

சோகமே உருவாய்

அதேநேரத்தில் பார்வையாளர்களின் மொத்த அனுதாப பார்வையும் ஷிவானி மீது விழுந்துள்ளது. வயதில் சிறிய பெண்ணான ஷிவானியை அனைவரும் கட்டம் கட்ட பேச முகமே சோர்ந்து போய் சோகமே உருவாய் உடைந்த போய் நிற்கிறார் ஷிவானி.

க்யூட் வீடியோ வைரல்

க்யூட் வீடியோ வைரல்

இருப்பினும் புரமோவை பார்த்து எதையும் டிசைட் பண்ண முடியாது என்றும், இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ஷிவானி நாராயணனின் க்யூட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்ணடிக்கும் ஷிவானி

கண்ணடிக்கும் ஷிவானி

அதில் கமலை போல் சைகையாலேயே தொடர்ந்து பாருங்கள் என இரண்டு விரல்களை கண்களை நோக்கியும் பார்வையாளர்களை நோக்கியும் காட்டும் ஷிவானி, நச்சென அவரைப் போன்றே கண்ணடிக்கிறார். பின்னர் வெட்கத்தில் சிரிக்கும் அவர் கீப் வாட்சிங் என்கிறார்.

இன்ஸ்டால எப்படி?

இன்ஸ்டால எப்படி?

ஷிவானியின் இந்த க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் லைட்டா லாஸ்லியா சாயல் தெரிகிறது என கூறியுள்ளனர். இன்னும் சிலர் நீங்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறீர்களே அப்புறம் எப்படி இன்ஸ்டா என கேட்டுள்ளனர்.

ஷெட்யூல் பண்ணிட்டீங்களா

ஷெட்யூல் பண்ணிட்டீங்களா

இன்னும் சிலர், 100 நாளைக்கும் ரசிகர்களை பிஸியாக வைத்துக்கொள்ள 100 போஸ்ட் ரெடியா ஷெட்யூல் பண்ணிட்டீங்களா என கேட்டுள்ளனர். பலரும் தலைவி எங்க ஓட்டு உங்களுக்குதான் என தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தினமும் இப்படி ஏதாவது போட்டு விடுங்க என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X