காதல் விவகாரம்: கோச்சடையான் நாயகி, அனுஷ்கா சொன்ன மெகா பொய்

By Siva

மும்பை: பாலிவுட் பிரபலங்களில் பொய் சொன்னவர்கள் பற்றி பார்ப்போம்.

பாலிவுட் நடிகைகளில் சிலர் திறமையாக பொய் சொல்வார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் வயது, காதல் பற்றி தான் பொய் சொல்வார்கள்.

அப்படி பொய் சொன்ன நடிகைகள் பற்றி பார்ப்போம்.

கத்ரினா

கத்ரினா

கத்ரினா கைஃப் தனது வயது குறித்து பொய் சொல்லியுள்ளார். பேட்டி ஒன்றில் அவர், பெர்லின் சுவர் விழுந்தபோது தனக்கு 8 வயது என்று தெரிவித்தார். பெர்லின் சுவர் 1989ம் ஆண்டு விழுந்தது. ஆனால் கத்ரினா ஆவணங்களில் தான் பிறந்த வருடம் 1984 என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபிகா

தீபிகா

தீபிகா படுகோனே பேட்டி ஒன்றில் தான் இதுவரை யாரையுமே டேட் செய்தது இல்லை என்றார். இது நம்பும்படியா இருக்கிறது?

அமீஷா

அமீஷா

நடிகை அமீஷா பட்டேல் நடிகர் அமிதாப் பச்சனின் பங்களாவான பிரதிக்ஷாவுக்கு அருகில் உள்ள அபார்ட்மென்டை வாடகைக்கு எடுத்துவிட்டு அதை வாங்கிவிட்டதாக பொய் சொன்னார். விளைவு அபார்ட்மென்ட் உரிமையாளர் அமீஷாவை வீட்டுக்குள் நுழையவிடவில்லை.

பிரியங்கா

பிரியங்கா

கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருமான வரித்துறையினர் அதிகாலையிலேயே நடிகை பிரியங்கா சோப்ராவின் வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அப்போது நடிகர் ஷாஹித் கபூர் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்த கதவை திறந்தார். அதிகாரிகள் வருவது பிரியங்காவுக்கு தெரியாது. இந்நிலையில் அவர் கூறுகையில், எனக்கு வருமான வரித்துறை அதிகாரிகளை கண்டால் பயம் அதனால் தான் ஷாஹித் கபூரை என் வீட்டுக்கு வரவழைத்தேன் என்றார். நம்பிட்டோம் பிரியங்கா!

கங்கனா

கங்கனா

2009ம் ஆண்டில் கங்கனா ரனௌத் தனக்கு 22 வயதாவதாக கூறி வந்தார். ஆனால் அவர் பாஸ்போர்ட் படி அப்போது அவருக்கு வயது 28. அப்படி என்றால் அவரின் தற்போதைய வயது 33.

அனுஷ்கா

அனுஷ்கா

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்தபோது அவரை காதலிக்கவே இல்லை என்று நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்து வந்தார். தற்போது கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை டேட் செய்கிறார் அனுஷ்கா. ரன்வீரை போன்று கோஹ்லியை காதலிப்பதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X