வசந்த குமாரனில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் பிந்து மாதவி!

By Shankar

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், இடம் பொருள் ஏவல் என தொடர்ந்து தன் மூன்று படங்களில் நடிகை ஐஸ்வர்யா இருக்குமாறு பார்த்துக் கொண்டார் விஜய் சேதுபதி.

இது மீடியாவில் கொஞ்சம் வேறு மாதிரி கிசுகிசுக்கப்பட, மனைவி, குழந்தைகள் என்று செட்டிலாகியிருக்கும் விஜய் சேதுபதி, அடுத்த படத்தில் ஜோடியை மாற்றியுள்ளார்.

Bindhu Madhavi is Vijay Sethupathy pair in Vasantha Kumaran

மெல்லிசைக்குப் பிறகு அவர் நடிக்கும் வசந்த குமாரன் படத்தில் அவருக்கு ஜோடி, பிந்து மாதவி.

தமிழ் சினிமாவின் ஆயிரத்துச் சில்லரையாவது காதல் கதை என்ற அறிவிப்போடு தயாராகும் 'வசந்த குமாரன்' படத்தை ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் சார்பாக சுரேஷ் களஞ்சியம் தயாரிக்கிறார். ஆனந்த் குமரேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இடம் பொருள் ஏவல்', 'புறம்போக்கு', 'மெல்லிசை' ஆகிய படங்களை முடித்துக் கொடுத்த கையோடு இந்தப் படத்துக்கு வருகிறார் விஜய் சேதுபதி.

பிந்து மாதவியும் அவரும் ஜோடி சேரும் முதல் படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X