அச்சச்சோ.. ரகசிய காதலை அம்பலப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்.. ஆனால் கடைசியில் இப்படி ஆகிடுச்சே!
சென்னை: கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த பிந்து மாதவி தனது ரகசிய காதல் பற்றி மனம் திறந்துள்ளார்.
Recommended Video
கடந்த 2011ம் ஆண்டு அஞ்சனா இயக்கத்தில் நானி, நித்யா மேனன், கார்த்திக் குமார் நடிப்பில் வெளியான வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிந்து மாதவி.
கமல்ஹாசன் தமிழில் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

விளம்பர படங்களில்
ஆந்திராவை சேர்ந்த பிந்து மாதவி கல்லூரி படித்து வந்த காலத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார். அதன் பலனாக, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அந்த விளம்பரத்தின் ரீச், அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

தமிழில்
தெலுங்கு படங்களில் நடித்து வந்த பிந்து மாதவி தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், கிருஷ்ணாவுடன் அவர் இணைந்து நடித்த கழுகு திரைப்படம் தான் சோலோ ஹீரோயினாக அவருக்கு நல்ல ஸ்கோப்பை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் டீச்சர் ரோல் என நடித்து வந்த பிந்து மாதவிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு சூப்பரான ரோல் என்றால், அது தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் தற்கொலை நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் கதாபாத்திரம் தான்.

பிக்பாஸ்
கிருஷ்ணா, விமல், தினேஷ், சிபி ராஜ் உள்ளிட்ட ஹீரோக்களில் நடித்து வந்த பிந்து மாதவிக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வருவதை அறிந்த பிந்து மாதவி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். ஆனால், அதன் பின்னரும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

சீக்ரெட் காதல்
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடிகர்கள், நடிகைகள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதை போல, நடிகை பிந்து மாதவியும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது, உங்களுடைய காதல் பற்றி சொல்லுங்களேன் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தனது சீக்ரெட் காதல் பற்றி மனம் திறந்துள்ளார்.

சிங்கிள் தான்
ஒரே ஒரு சீக்ரெட் க்ரஷ் இருந்தது, அது திருமணத்திற்கு செல்லும் அளவுக்கு கமிட் ஆனது. ஆனால், கடைசியில் காணாமல் போயிடுச்சு என தனது ரகசிய காதல் பிரேக்கப் ஆகிடுச்சு என்ற விஷயத்தை ஷேர் செய்துள்ள பிந்து மாதவி, தான் இன்னும் சிங்கிள் தான் என்பதையும் பதிவு செய்துள்ளார்


Click it and Unblock the Notifications











