»   »  கான்களோடு நடிக்கவில்லை, காணாமலா போய்விட்டேன்?: பிபாஷா

கான்களோடு நடிக்கவில்லை, காணாமலா போய்விட்டேன்?: பிபாஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கான்களின் படங்களில் நடிக்காவிட்டாலும் தான் பாலிவுட்டில் நிலைத்து நிற்பதாக நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை, மாடல் ஆக உள்ளவர் பிபாஷா பாசு. அவர் கரண் சிங் க்ரோவருடன் சேர்ந்து நடித்துள்ள அலோன் என்ற பேய் படம் கடந்த 16ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிபாஷா சல்மான், ஆமீர் மற்றும் ஷாருக்கான் பற்றி பேசியுள்ளார்.

பிபாஷா

பிபாஷா

பாலிவுட்டில் சுமார் 15 ஆண்டுகளாக இருக்கும் பிபாஷா பாசு இதுவரை சல்மான் கான், ஆமீர் கான், ஷாருக்கானுடன் நடித்தது இல்லை. அதற்காக அவர் கவலைப்படவும் இல்லை.

கான்கள்

கான்கள்

கான்களுடன் நடித்த பல நடிகைகள் திரை உலகில் இருந்து காணமால் போயுள்ளனர். அப்படி இருக்கையில் அவர்களுடன் பெரிய படத்தில் நடிப்பதில் என்ன பயன் என்று பிபாஷா கேட்டுள்ளார்.

லகான்

லகான்

நான் 2001ம் ஆண்டு அஜ்னபி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானேன். அதே ஆண்டு கிரேஸி சிங் ஹீரோயினாக நடித்த லகான் வெளியானது. அது நல்ல படம் தான். ஆனால் நான் தான் இங்கு இன்னும் இருக்கிறேன் கிரேஸி இல்லை என்று பிபாஷா தெரிவித்துள்ளார்.

காமெடி

காமெடி

நான் முழுநேர காமெடி படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் காமெடி செய்து மக்கள் பார்த்தது இல்லை. அதனால் காமெடி படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் பிபாஷா.

English summary
Actress Bipasha Basu has spent close to 15 years in the Hindi film industry, without working with any of the top Khans - be it Shah Rukh, Aamir or Salman. But she has no regrets whatsoever.
Please Wait while comments are loading...