பிங்க் நிகாஷாவில் 'க்யூட்' பேபியாக வலம் வந்த பிபாஷா!

மும்பை: சமீபகாலமாக ஊடகங்களின் பார்வையில் இருந்து தள்ளி இருந்தார் பிபாஷா பாசு. ஹம்ஸ்கல்ஸ் பட புரோமோஷன் விழாக்களில் கூட அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழா ஒன்றில் கலந்து கொண்டார் பிபாஷா பாசு. அப்போது அவர் அணிந்து வந்திருந்த இளஞ்சிவப்பு நிற உடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

மும்பையின் என்.எம்.கல்லூரியில் 'கிரியேட்சர் 3டி' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் பிபாஷா பாசு. அப்போது அவர் இளஞ்சிவப்பு நிற உடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அந்த உடையில் அவரது அழகு இன்னும் கூடுதலாக இருந்தது.

பல அடுக்கு உடை...

பல அடுக்கு உடை...

பிபாஷா பாசு அணிந்திருந்த அந்த இளஞ்சிகப்பு உடை பல அடுக்குகளாக அமையப் பெற்றிருந்தது. இவ்வாறு வெளியிடங்களுக்கு பிபாஷா பாசு உடை அணிந்து வருவது இதுவே முதல்முறை என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

தளர்வான கோட்...

தளர்வான கோட்...

சற்று தளர்வான சுடிதார் டாப்ஸ் போன்ற உடையையும், கீழே சற்று இறுக்கமான பேண்ட்டும் அணிந்து, இந்த உடைக்கு நன்கு தளர்வான கோட் ஒன்றையும் பிபாஷா அணிந்திருந்தார்.

பப் வைத்த கை...

பப் வைத்த கை...

பிபாஷா அணிந்திருந்த கோட் வெள்ளை நிறத்தில் வெள்ளி நிற வேலைப்பாட்டுடன் இருந்தது. அதன் கைகளில் சற்று தூக்கலாக ‘பப்' வைக்கப் பட்டிருந்தது.

மேட்ச்சாக செருப்பு...

மேட்ச்சாக செருப்பு...

இந்த உடைக்குப் பொருத்தமாக இளஞ்சிவப்பு நிறத்திலேயே ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்திருந்தார் பிபாஷா. மேலும், நகங்களுக்கும் இளஞ்சிவப்பு நிற பாலீஷ் பூசியிருந்தது கூடுதல் அழகாக இருந்தது.

வித்தியாசமான சிகையலங்காரம்...

வித்தியாசமான சிகையலங்காரம்...

சற்று தளர்வாக தலையை ஒரு புறமாக பின்னலிட்டு இருந்தார் பிபாஷா. வழக்கமாக இத்தகைய சிகையலங்காரத்தில் அவர் பொது இடங்களுக்கு வருவதில்லை என்பதால் இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.

கலகலப்பான நிகழ்ச்சி....

கலகலப்பான நிகழ்ச்சி....

கலக்கலான உடையணிந்து வந்திருந்த பிபாஷா, கல்லூரி மாணவ - மாணவியர்களுடன் கலகலப்பாக உரையாடி நிகழ்ச்சியை மேலும் கலர்புல்லாக்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X