Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
''அதுக்கு இப்ப என்ன அவசரம்...” – பிபாஷா பாசு அதிரடி!
மும்பை: மும்பையின் அழகுப் பிசாசான பிபாஷா பாசு தான் திருமணம் செய்து கொள்ள அவசரப்படவில்லை என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் வெளியிட்டுள்ளார்.
35 வயதாகும் பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு தனது சினிமா பயணத்தை 2001 ஆம் வருடத்தில் தொடங்கினார்.
முதல் முதலாக அஜ்னபி என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிபாஷா அதன் பின்னர், தூம் -2, ராஸ் என்று வெற்றிப் படங்களின் மூலமாக வெற்றியைக் குவிக்க ஆரம்பித்தார்.
கிரியேட்டர் 3டி வெற்றிமழை:
பிபாஷா பாசு நடித்த ஆத்மா, ஹம்சகல்ஸ் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் கிரியேட்டர்- 3டி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
நிச்சயதார்த்தம் நடந்ததா?:
இந்த நிலையில் பிபாஷா பாசுக்கு தனது காதலர் ஹர்மன் பவேஜாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.
சினிமாவில் கவனம்:
இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த அவர் திருமணம் செய்து கொள்ள தான் அவசரப்படவில்லை என்றும் தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
திருமண பந்தத்தை மதிக்கிறேன்:
மேலும் அவர் கூறும்போது, " திருமண பந்தத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்கு என்று நேரம் இருக்கிறது.நான் திருமணம் செய்து கொள்வேன்.
இப்போதைக்கு அவசரமில்லை:
நான் செய்ய வேண்டிய படங்கள் உள்ளன. நடிப்பு தவிர பலவற்றை நான் சிந்தித்து வைத்து உள்ளேன். அதைப்பற்றி நான் கூற இயலாது" என்று கூறியுள்ளார்.