பிறந்த நாளும் அதுவுமா... குழந்தையுடன் பிகினியில் பீச் போட்டோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்

By

Recommended Video

தாய்மையின் பூரிப்பில் எமி ஜாக்சன்... குழந்தையுடன் ஜாலி வாக் - குவியும் பாராட்டு

சென்னை: நடிகை எமி ஜாக்சன் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தையுடன் அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார்.

இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து தமிழில் நடித்தார். விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்கமகன், விக்ரமின் ஐ, விஜய்யின் தெறி உட்பட சில படங்களில் நடித்தார்.

தொழிலதிபருடன் காதல்

தொழிலதிபருடன் காதல்

தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களில் நடித்த அவர், தமிழில் கடைசியாக ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்திருந்தார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

பின்னர் கர்ப்பிணியாக இருந்த எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பெனாய்டோவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. லண்டனில் நடந்த இந்த விழாவில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இந்நிலையில் கடந்த வருடம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என்று பெயர் வைத்த எமியும் அவர் காதலரும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். பின்னர், பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் குழந்தைக்கு போட்டோஷூட் நடத்தி பிரமிக்க வைத்தனர். அந்தப் புகைப்படங்கள் வைரலாகின.

இன்று பிறந்தநாள்

இன்று பிறந்தநாள்

இந்நிலையில் எமி ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி காதலருடன் செசல்ஸ் தீவு சென்றுள்ள எமி ஜாக்சன், அங்கு கடற்கரையில் குழந்தையுடன் இருக்கும் பிகினி போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் வளைந்த தென்னை மரமொன்றில் படுத்தபடி குழந்தையை தூக்கியிருப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X