ஹேப்பி பர்த்டே ராய் லக்ஷ்மி.. சூப்பர் டான்ஸர்.. இந்த 5 பாடல்களில் இன்னாம்மா ஆடியிருப்பாரு தெரியுமா?

சென்னை: நடிகை ராய் லக்‌ஷ்மியின் 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Office Serial Madhumila (Laxmi) shares her maternity picture | Office Serial

2005ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராய் லக்‌ஷ்மி.

ஏய்.. செக்கச் செக்க சிகப்பி, சேலை கட்டுன குல்ஃபி என பாடும் அளவுக்கு தக தகவென மின்னினாலும், ராய் லக்‌ஷ்மிக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை.

ஆனால், தனது கவர்ச்சியான நடனத்தால், பல தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக ராய் லக்‌ஷ்மி வலம் வருகிறார். தனது நடனத்தால் தமிழ் ரசிகர்களை பல முறை திக்குமுக்காட செய்துள்ளார். அதில் ஹாட் 5 பாடல்கள் பற்றி இங்கே காண்போம்.

கருப்பு பேரழகா

கருப்பு பேரழகா

காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார் ராய் லக்‌ஷ்மி. ராய் லக்‌ஷ்மி நாயகியாக நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் அவருக்கு அமைந்த படம் காஞ்சனா தான். ராகவா லாரன்ஸின் நடன அசைவுகளில் தமன் இசையில் வெளியான "கருப்பு பேரழகா" பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாடு மங்காத்தா

விளையாடு மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் நடிகர் அஜித்துடன் மிக நெருக்கமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த படத்தின் ஓபனின் சாங்கானா "விளையாடு மங்காத்தா" பாடலுக்கு நடிகை ராய் லக்‌ஷ்மி தனது மொத்த நடனத் திறமையும் வெளிப்படுத்தி தல ரசிகர்களை குஷிப்படுத்தி இருப்பார். யுவன் இசையில் வெளியான அந்த பாடல் அஜித் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்.

ஹலோ பிரதர்

ஹலோ பிரதர்

இளம் நடிகர் அதர்வாவுடன் இணைந்து இரும்பு குதிரை படத்திற்காக செம ஸ்டைலாக நடனமாடியிருப்பார் ராய் லக்‌ஷ்மி. பா. விஜய் வரிகளில் சின்ன பொண்ணு, சுசித்ரா, கே.ஜி. ரஞ்சித் பாடிய "ஹலோ பிரதர்" எனும் அந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருப்பார். அதர்வா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான அந்த படத்தில் ராய் லக்‌ஷ்மி துணை நடிகையாக நடித்திருப்பார்.

ஹர ஹர மகாதேவகி

ஹர ஹர மகாதேவகி

காஞ்சனா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான படம் மொட்ட சிவா கெட்ட சிவா. கருப்பு பேரழகா பாடலில், ராகவா லாரன்ஸுடன் செம குத்தாட்டம் போட்ட ராய் லக்‌ஷ்மியை "ஹர ஹர மகாதேவகி" பாடலுக்கு செம கிளாமராக ஆட வைத்திருப்பார். அந்த பாடல் வரிகளுக்கு சர்ச்சை வர "ஹர ஹர மகாராணிக்கு" எனவும் வரிகளை மாற்றியிருப்பார்கள்.

வா சகி

வா சகி

இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் வெளியான படம் நீயா 2. ஜெய், கேத்தரின் தெரசா, வரலக்‌ஷ்மி சரத்குமார், ராய் லக்‌ஷ்மி என பலர் நடித்திருந்தனர். பழி வாங்கும் பாம்பாக உச்சகட்ட கவர்ச்சியை காட்டி அந்த படத்தில் நடிகை ராய் லக்‌ஷ்மி நடித்திருந்தார். ஜெய்யுடன் சேர்ந்து தண்ணீரில் நனைந்தபடி அவர் ஆடும் "வா சகி" பாடல் ரசிகர்களுக்கு செம விருந்து என்றே சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X