தலையில் மிளகாய் அரைக்க பார்த்த தமிழ் நாட்டுப் பெண்.. கையும் களவுமாக பிடித்த அனுபமா பரமேஸ்வரன்!
சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே பேசு பொருளாக உள்ளார். அதற்கு முக்கியமான காரணம் பைசன் படத்தில் அவரது நடிப்பும், அதற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களும் தான். மேலும் தி பெட் டிடெக்டிவ் என்ற படமும் அனுபமாவுக்கு பாராட்டுகளை பெற்று தந்து கொண்டிருக்கிறது.இப்படி இருக்கும்போது, அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரண்டு பக்க பதிவானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவரது பதிவில், " யாரென்றே தெரியாத நபர் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்பி வந்தார் அந்த மர்ம நபர். முதலில் இதை வழக்கமாக இணையவாசிகள் செய்யக் கூடிய ஒரு செயல் என்றுதான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அந்த மர்ம நபர் உருவாக்கிய போலி கணக்குகளில் பதிவிட்ட பதிவுகளுக்கு எனது நட்பு வட்டத்தை சேர்ந்தவர்களையும், குடும்பத்தினரையும் டேக் செய்து பதிவிட்ட போது தான் என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டு பெண்: ஒரு முயற்சிக்குப் பின்னர் இந்த வேலைகளைச் செய்து வந்த மர்ம நபர் யார் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.அது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். அந்த பெண் என்னை டார்கெட் செய்து மார்பிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட மட்டும் பல போலியான கணக்குகளை உருவாக்கி உள்ளார். தற்போது அந்த பெண் மீது கேரளா சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன். அந்த 20 வயது இளம் பெண்ணின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அது அவரது எதிர்காலத்தை மனதில் வைத்து தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் அளித்த புகார் மீதான நடவடிக்கையை சைபர் கிரைம் போலீசார் வழக்கமான நடவடிக்கைகளை எடுப்பார். ஆனால் அந்த பெண்ணின் பெயரை மற்றும் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று எனக்குள் தோன்றியதால் நான் இவ்வாறு செய்கிறேன். மேலும் இந்த பிரச்னையை பெரிதாக்கவும் விரும்பவில்லை.
பொறுப்பு: சமூக ஊடகங்கள் மட்டும் இருப்பதால் மக்கள் எதையும் செய்ய முடியும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஆன்லைன் செயல்களை எளிதாகக் கண்காணிக்க முடியும் என்பதை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மேலும் குற்றம் செய்த அந்த பெண்ணின் பெயரைச் சொல்லாமல் விட்டதற்கும் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











