பாஜகவில் இணையும் மீனா?.. விரைவில் வருகிறதா அறிவிப்பு.. ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிருக்காரே?

சென்னை: மீனா தமிழ் சினிமாவில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்தவர். 90களில் அவர் நடித்த ஏராளமான படங்கள் மெகா ஹிட்டாகி அவரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற்றியது. சூழல் இப்படி இருக்க வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். தற்போது திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் மீனா அரசியலில் களம் காணவிருப்பதாக தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் வந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் ரொம்பவே ஃபேமஸாக இருப்பவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த அவர் சிவாஜி, ரஜினி உள்ளிடோருடன் அப்போதே நடித்துவிட்டார். முக்கியமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனா குழந்தையாக நடித்தது பலரது பாராட்டை பெற்றது. மிகச்சிறந்த நடிகையாக வருவார் என்று அப்போதே அவர் பெயர் எடுத்துவிட்டார்.

முதல் படமே மெகா ஹிட்: மீனா வளர்ந்த பிறகு தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழிலும் நடிக்க முடிவெடுத்த அவர் ராஜ்கிரண் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே படத்தில் 1991ஆம் ஆண்டு காலடி எடுத்துவைத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் மீனா சோலையம்மா என்ற கேரக்டரை ஏற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி ஹீரோயின்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர். அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்ட அவர்; மறுபக்கம் அப்போது வளர்ந்துவந்த நடிகராக இருந்த அஜித் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

உயிரிழந்த கணவர்: ஹீரோயின் வாய்ப்பு குறைந்த சமயத்தில் வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவரும் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். அதற்கு பிறகு நடிக்கவில்லை. மீனாவும் சில வருடங்கள் நடிக்காமல் இருந்து திரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோலை ஏற்றிருந்தார். தொடர்ந்து அவர் நடிக்க வேண்டுமென்பது அவரது ரசிகர்களுடைய ஆசையாக இருக்கிறது.

Blue Sattai Maran says actress Meena will join BJP here are full details
Photo Credit:

அரசியலில் மீனா?: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது வீட்டில் பொங்கல் விழாவை நடத்தினார். அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மேலும் நடிகை மீனா, நடன அமைப்பாளர் கலா மாஸ்டர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டான சூழலில்; பாஜகவில் மீனா இணையப்போகிறார் என்ற தகவலும் பரவியது. ஆனால் மீனாவோ எதுவும் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் நடிகை மீனா டெல்லிக்கு சென்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்தார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது. அதை பார்த்த சிலரோ மீனா பாஜகவில் இணையப்போகிறார் என்றும்; அவருக்கு மத்திய அமைச்சர் பதவியோ இல்லை கட்சியில் முக்கியமான பொறுப்போ வழங்கப்படும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியுடன் மீனா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'பாஜகவில் இணைகிறார் மீனா. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவுள்ளதாக தகவல்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X