ராஷ்மிகா மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது.. த்ரிஷா எல்லாம் தேவையா.. தெலுங்கு டப்பிங்கில் முரட்டு வேலை!
சென்னை: சினிமாக்களில் சினிமா பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்துவது என்பது சாதாரண விஷயம் தான். அவை பல படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடிகர்களின் பெயர்கள் அவர்கள் நடித்த படங்களின் பெயர்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்பட்டால் அது, தரமான ரெஃபரன்ஸ் என்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதேபோல் பல காட்சிகளில் நடிகைகளின் பெயர்கள், நகைச்சுவை நட்சத்திரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டால் அந்தந்த காட்சிகளுக்கு ஏற்ற ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுகிறது. தமிழிலே கூட த்ரிஷா இல்லையினா நயன்தாரா, ஓவியாவை விட்டா யாரு?, கட்டப்பாவ காணோம் என பல படங்களும் கூட வெளியாகி உள்ளது. இவை எல்லாம் சினிமாவில் இருந்து ரெஃபரன்ஸாக வைக்கப்பட்ட பெயர்கள் தான்.
இந்நிலையில் தெலுங்கு படமான BMW என்ற படத்தின் தமிழ் டப்பிங்கில் வைக்கப்பட்டுள்ள வசனம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தில் ஒரு காட்சியில், " இன்னும் எவ்வளவு பொய் சொல்லுவியோ சொல்லு. வீட்டில் ராஷ்மிகா மாதிரி ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டு, இந்த த்ரிஷா கிரிஷா எல்லாம் தேவையாடா என்று கேட்க, அதற்கு த்ரிஷாவை பற்றி மட்டும் பேசாதே" என்று பதில் டயலாக் இருப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

த்ரிஷா சர்ச்சை: இந்த காட்சியை தனியாக வெட்டி இணையத்தில் ரசிகர்களும் இணையவாசிகளும் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தற்போது நடிகை த்ரிஷாவை சுற்றி நடைபெற்று வரும் சர்ச்சைகளுடனும் சிலர் தொடர்பு படுத்தி வருகிறார்கள். குறிப்பாக நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் விவாகரத்து சர்ச்சை வெளியான பின்னர், நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து திருமணத்திற்குச் சென்றது விஜய் ரசிகர்கள் பலரது மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியது.
தேர்தல் நேரத்தில்: BMW என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கைப் பகிர்ந்த இணைய வாசி ஒருவரோ இந்த வீடியோவை எடுத்து வைப்போம் தேர்தல் நேரத்தில் உதவும் என்று நக்கலாக கமெண்ட் போட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











