»   »  தாவிய பாபிலோனா !

தாவிய பாபிலோனா !

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வந்த பாபிலோனா இப்போது காமெடிக்குத் தாவியுள்ளார்.

ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபி. ஹீரோயின்களின் குத்துப் பாட்டுக்கள்"ஃபேமஸ்" ஆவதற்கு முன்பாக கவர்ச்சி "ககதளி" ஆடியவர்.

சத்யராஜ் உள்ளிட்ட மூத்த ஹீரோக்களை வளைத்துப் போட்டுக் கொண்டு அவர்களது படங்களில் தவறாமல் இடம் பெற்றார். ஏகப்பட்டபடங்களில் நடித்து வந்த போது பாபிலோனா குறித்து பல வதந்திகள் உண்டு.

பலான படங்களில் நடிக்கிறார், முன்னணி நடிகர்களுடன் அலங்கோலமாக இருக்கும்போது அதை அவர்களுக்குத் தெரியாமல் படம் எடுத்துவைத்துக் கொண்டு அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் கறக்கிறார் என்று கூறப்பட்டது. இப்படி மாட்டியவர்களில் சத்யராஜின் பெயர்கூட அடிபட்டது.

ஆனால் இதை பாபிலோனாவும், அவர் கூடவே நிழல் போல ஒட்டிக் கொண்டிருந்த அவரது பாட்டியும் மறுத்தனர்.

இந்த சமயத்தில்தான் கணவரை அடைத்து வைத்து பாபிலோனாவும், அவரது குடும்பத்தினரும் அடித்ததாக புகார் கிளம்பியது. இந்தசர்ச்சையால் பாபிலோனா கோர்ட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலையத் தொடங்கினார்.

ஒரு வழியாக இந்த அமளி முடிந்து கொஞ்ச நாளாக அமைதியாக இருந்து வந்தார் பாபிலோனா. வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி பறந்துபறந்து போய் கலைச் சேவை செய்து வந்த பாபிலோனா சினிமாவில் பாட்டுக்கு ஆட வாய்ப்பு தேடி அலைந்தும் பலனளிக்கவில்லை.

அப்படி வாய்ப்புக் போன இடத்தில் ஒரு தயாரிப்பாளர், காமெடி சீன்ல நடிக்கிறீயாம்மா என்று கேட்க, அதைக் கேட்டு வாய்விட்டுசிரித்தாராம் பாபி. நடிக்க சொன்னால் சிரிப்பதேன் என்று தயாரிப்பாளர் குழம்ப, எனக்கு நடிக்க வராதே சார் என்று உள்ளதை உள்ளபடியேசொன்னாராம்.

அதெல்லாம் டைரக்டர் பார்த்துகுவாறு, நீ வந்து நடிம்மா என்று சொல்லிவிட்டாராம்.

இது குறித்து பாட்டியிடம் பாபி ஆலோசித்தாராம். ஷர்மிலியும் கவுண்டமணியும் ஜோடி போட்டு காமெடியில நடிக்கலையா, ஷகீலா கூடஆரம்பத்தில் கவுண்டமணியுடன் தானே நடித்தார், அதனால தைரியமா காமெடிக்குப் போ என்று பாட்டி ஆசிர்வதித்து அனுப்பினாராம்.

இதையடுத்து காதலும் கற்று மற படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறாராம் பாபி.

வெறும் காமெடி என்றால் அதுக்கு காந்திமதியே போதுமே.. பாபிலோனாவை காமெடிக்கு இறக்கிவிட்டதற்குக் காரணம் உண்டு. இதில்காமெடி என்ற பெயரில் கவர்ச்சியில் புகுந்து விளையாடும் ரோலாம் தானாம்.

இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன் என்று பாபிலோனாவும் கொடுக்க கேரக்டரில் கிளாமரை பிழிந்து ஊற்றி இயக்குனரை புல்லரிக்கவைத்துக் கொண்டிருக்கிறாராம்.

படத்தில் பாபிலோனாவுக்கு என்ன ரோல் தெரியுமா? ட்யூஷன் டீச்சர்.

அப்படியே இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பேசி சரி கட்டி ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளாராம்.

Read more about: bobylona doing comedy role

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil