கார் விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்?.. பதற்றமடைந்த ரசிகர்கள்.. வெளியான முழு தகவல் இதோ!
மும்பை: ஜீன்ஸ், எந்திரன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் திகழும் இவர், இன்று கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், கார் விபத்தில் சிக்கியது உண்மைதானா என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர். மேலும், ஐஸ்வர்யா ராய் விபத்திற்குள்ளானதாக வெளியான செய்தி பாலிவுட்டையே கலங்கடித்திருக்கிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தாலும், தமிழில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா ராய். இயக்குநர் மணிரத்னம் தான் அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், எந்திரன், ராவணன் படத்தில் நடித்து பிரம்மிப்பை ஏற்படுத்தினார் ஐஸ்வர்யா ராய். வயது ஆக ஆக அழகு மட்டும் குறையவில்லை என பேச்சும் அடிபட்டது. அதன் பின்பு அவர் நடிக்கும் சில இந்தி படங்களில் தமிழில் டப் செய்யப்பட்டு வந்தன.

பின்னர், பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் தம்பதியின் மகனான அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். இவரது மகளை பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வெளியாகின. அவரது உடல்நிலை குறித்தும் தேவையில்லாத வதந்தி செய்திகளும் பரவின. அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரிந்து விட்டதாகவும், விவகாரத்து பெற்றிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால், ஐஸ்வர்யா ராய் இதுகுறித்து எந்தவித ரியாக்சனும் அளிக்கவில்லை. பின்னர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராத்யாவின் புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பிறகு இந்தியில் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இல்லற வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட விழாக்களில் அவர் ஐஸ்வர்யா ராய் அணிந்து செல்லும் ஆடைகள் பிரம்மிப்பை ஏற்படுத்தி வைரலாவதும் உண்டு. எங்கு சென்றாலும் தனது மகளை அழைத்து செல்வார். இதனால், ரசிகர்கள் மத்தியில் அவர் மீது மரியாதையும் மதிப்பும் கூடியது. நல்ல தாயாக இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து?: மும்பை நகரின் முக்கிய வீதியில் சென்றபோது ஐஸ்வர்யா ராயின் கார் விபத்தில் சிக்கியது போன்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பின்னர், பாதுகாப்புக்கு வந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து ஐஸ்வர்யாவை மீட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த முழுமையான செய்திகள் வெளியாகவில்லை. மேலும், மற்றொரு செய்தி நிறுவனம் ஐஸ்வர்யா ராய் நலமுடன் இருக்கிறார். அவர் விபத்தில் ஏதும் சிக்கவில்லை. பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக வெளியாகியுள்ளது.
குழப்பம்: ஐ்ஸ்வர்யா ராய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் வீட்டில் இருக்கிறார். கார் விபத்து போன்ற செய்திகள் நம்கத்தன்மை வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆதாரமற்ற செய்திகள் வெளியாவதால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் குழம்பி போயிருக்கின்றனர். விபத்து நடந்தது உண்மையா இல்லையா, எதைத்தான் நம்புவது என நெட்டிசன்கள் போஸ்ட் போட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராய் நலமுடன் இருக்கிறாரா என கேட்க தொடங்கிவிட்டனர். மேலும், ஐஸ்வர்யா ராய் 2003ல் காக்கி என்ற படத்தில் நடித்த போது கார் விபத்தில் காயமடைந்தார். அப்போது நீண்ட நாள் ரெஸ்டில் இருந்தார். பின்னர் சூட்டிற்கு வந்த அவர், இதுபோன்ற விபத்தை மறக்கவே நினைக்கிறேன். எனது வாழ்வில் இனியொரு நிமிடம் கவனமாக இருப்பேன் என்று பழைய நினைவுகளை சமீபத்தில நினைவுகூர்ந்தார். தற்போது அந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











