மல்லாக்கப்படுத்து கவர்ச்சி தாகமூட்டும் அலியா பட் .. டிஸ் லைக் பட்டனை தேடும் ரசிகர்கள் !

மும்பை : பாலிவுட் நடிகை அலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல் தரையில் மல்லாக்க படுத்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சதக் 2 திரைப்படத்தின் ட்ரைலர் உலக அளவில் அதிக டிஸ் லைக்குகளை பெற்ற ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது

சுஷாந்த் சிங் தற்கொலை மரணம் விவகாரத்தில் அவரது ரசிகர்கள் பலரும் அலியா பட் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களின் மீது கடும் கோபத்தில் இருக்கின்ற நிலையில் அலியா பட் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் பங்கமாக கலைத்து வருவதோடு இன்ஸ்டாகிராமில் டிஸ் லைக் பட்டன் இருந்தா நல்லா இருக்குமே என கூறிவருகின்றனர்.

வெற்றி வலம்

வெற்றி வலம்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அலியா பட் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான கதாபாத்திரம்

வித்தியாசமான கதாபாத்திரம்

பிரபல திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்திருக்கும் அலியா பட் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதற்காக பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் வென்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

எதிராக குரல்

எதிராக குரல்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த சுஷாந்த் சிங் தற்கொலை மரணத்திற்கு அலியா பட்டும் ஒரு காரணம் என ரசிகர்களால் சொல்லப்பட்டு வந்த நிலையில், இவரை அலியா பட்டை ரசித்த ரசிகர்கள் பலரும் இப்பொழுது இவருக்கு எதிராக குரல் கொடுத்தும் அவர் நடிக்கும் திரைப்படங்களை திரையில் காண மாட்டோம் எனவும் கூறிவரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் சதக் 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

செம காண்டில்

செம காண்டில்

ஏற்கனவே செம காண்டில் இருக்கும் ரசிகர்கள் சதக் 2 திரைப்படத்தில் அலியா பட் நடித்திருக்கிறார் என்பதை அறிந்து இந்த ட்ரைலருக்கு டிஸ் லைக்குகளை வாரி குவித்தனர். நிலையில் உலகிலேயே அதிக டிஸ் லைக்குகளை பெற்ற பெருமையை இந்த ட்ரைலர் பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படமும் வெளியாகி உள்ளது.

புல் தரையில் மல்லாக்க

புல் தரையில் மல்லாக்க

இந்நிலையில் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லாத அலியா பட் இப்பொழுது மீண்டும் பதிவுகளை தொடர்ந்து பதிவிட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தற்போது புல் தரையில் மல்லாக்க படுத்தவாறு தனது கண்ணக்குழி அழகு தெரிய சிரித்த முகத்தோடு பஞ்சவர்ண கிளி போல பல நிறங்களில் உள்ள உடையை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது ஆக்ரோஷமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆக்ரோஷமான கமெண்ட்களை

ஆக்ரோஷமான கமெண்ட்களை

"உனக்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னால் தடுக்க முடியாமல் போகலாம் , ஆனால் உன்னால் அதை குறைக்க முடியும்" என்ற பாசிட்டிவான வாசகத்தோடு பதிவிட்டு இருந்த இந்த பதிவிற்கு பலரும் இந்த வேளையில் இன்ஸ்டாகிராமில் டிஸ் லைக் பட்டன் இருந்தால் நல்லா இருக்கும் என்ற கமெண்ட்களையும், உங்களது அடுத்தடுத்த படங்கள் எப்படி வெற்றி பெறுகிறது என பார்ப்போம் என்ற ஆக்ரோஷமான சில கமெண்ட்களையும் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அலியா பட் தனது அடுத்த பதிவிற்காக தயாராகிக் கொண்டு உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X