கெத்து காட்டும் அட்லீ.. அல்லு அர்ஜூனுக்கு ஜோடியான தீபிகா படுகோனே.. சம்பவம் காத்து இருக்கு!

சென்னை: இயக்குநர் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், அட்லீ, தீபிகா படுகோனேவிற்கு கதை பற்றி விவரிக்கிறார். இதில், தீபிகா, வேற்று கிரக வாசி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பீஸ்ட் படங்களை எடுத்தார். இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். பான் இந்திய திரைப்படமாக உருவான இத்திரைப்படம் உலக அளவில் 1300 கோடி வசூலை அள்ளியது. ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் அனைவரும் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார்கள்.

Atlee Deepika Padukone Allu Arjun
Photo Credit:

அல்லு அர்ஜூன் 26: பாலிவுட்டில் கால் பதித்துவிட்ட அட்லீ, தற்போது டொலிவுட் பக்கம் தனது தடத்தை பாதித்துள்ளார். புஷ்பா பட புகழ், அல்லு அர்ஜூனை வைத்து படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அல்லு அர்ஜூன் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள அட்லீ, ஹாலிவுட் கதாசிரியர்களுடன் இணைந்து கதை பற்றி விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே: இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கமிட்டாகி உள்ளார். அட்லி, அவரின் படத்தின் கதை குறித்தும், கதாபாத்திரம் குறித்தும் சொல்லும் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் போது, இந்த திரைப்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அசத்தலாக படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும். சுமார் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இத்திரைப்படம் அல்லு அர்ஜூனின் 26வது படம் என்பதால், இத்திரைப்படத்திற்கு AA26 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X