நிறைமாத நிலவே வா..வா.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்

சென்னை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கடந்த மாதமே ஆண் குழந்தை பிறந்து விட்டதாக செய்திகள் வெளியான, நிலையில் நிறைமாத வயிற்றுடன் தனது கணவரின் அரவணைப்பில் இருக்கும் பிரக்னன்சி போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது

deepika padukone ranveer singh photos

பாலிவுட்டில் அனைவரும் விரும்பும் நட்சத்திரஜோடியாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர் உள்ளனர். இவர்கள், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

deepika padukone ranveer singh photos

தீபிகா படுகோன்: திருமணத்திற்கு பிறகு தீபிகா, பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். அந்த படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கு வசூலை அள்ளியது. அந்த படத்தைத் தொடர்ந்து கல்கி கி.பி 2898 படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

deepika padukone ranveer singh photos

குழந்தை பிறந்துவிட்டது: இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இவர், தாயானதால், பலர் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தீபிகா படுகோனேவுக்கு ஆண் குழந்தை இருந்தால் அதிர்ஷ்டம் என்றும், தீபிகா மற்றும் ரன்வீரின் ஜாதகப்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு ஆண்குழந்தை பிறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

deepika padukone ranveer singh photos

அழகான போட்டோஸ்: இந்நிலையில், நடிகை தீபிகா, தனது கணவருடன் நிறைமாத வயிற்றுடன் இருக்கும் பிரக்னன்சி போட்டோ ஷூட்டை பதிவிட்டுள்ளார். இதில் தன்னுடைய கணவர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடித்து, குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டதாக பதிவிட்டுள்ளார். தீபிகாவிற்கு இந்த மாதம் 28ந் தேதி குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

deepika padukone ranveer singh photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X