பதான் கொடுத்த சூப்பர் ஹிட்... ஹீரோக்களுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோன்!

மும்பை: பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கடந்த மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் படத்தில் ஸ்பையாக நடித்து ஆக்‌ஷன் ப்ளஸ் க்ளாமர் ட்ரீட் கொடுத்திருந்தார்.

இந்தியளவில் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், தற்போது பிரபாஸுடன் ப்ராஜக்ட் கே, அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு தீபிகா படுகோன் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஓம் சாந்தி ஓம் நாயகி

ஓம் சாந்தி ஓம் நாயகி

2007ம் ஆண்டு இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தீபிகா படுகோன். ஷாருக்கானால் அறிமுகப்படுத்தப்பட்ட தீபிகா, அதன்பின்னர் பாலிவுட்டின் டாப் ஹீரோயினாக கலக்கி வருகிறார். கடந்த மாதம் வெளியான பதான் படத்தில் ஷாருக்கானுடன் ஸ்பையாக நடித்து மிரட்டியிருந்தார். ஷாருக்கான், தீபிகா கூட்டணியில் மற்றுமொரு ப்ளாக் பஸ்டர் படமாக இது அமைந்தது.

 ஆயிரம் கோடி வசூல்

ஆயிரம் கோடி வசூல்

பாய்காட் பிரச்சினைகளை கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பதான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முக்கியமாக ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட பின்னரும் ஷாருக்கானுக்காக தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கலங்கடித்தார். ஷாருக்கான் ஒருபக்கம் மாஸ் காட்டினால், தீபிகாவும் அவருக்கு இணையாக ஆக்‌ஷன் ப்ளஸ் க்ளாமரில் அதகளம் செய்திருந்தார்.

 சம்பளத்தை உயர்த்திய தீபிகா

சம்பளத்தை உயர்த்திய தீபிகா

பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கடந்ததால் ஷாருக்கான் மட்டும் இல்லாமல், தீபிகாவும் ரொம்பவே ஹேப்பியாகிவிட்டார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸுடன் ப்ராஜக்ட் கே, மீண்டும் ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பதான் கொடுத்த அல்டிமேட் ஹிட்டால், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம் தீபிகா படுகோன்.

 அசந்து நிற்கும் பாலிவுட்

அசந்து நிற்கும் பாலிவுட்

திருமணத்துக்குப் பிறகும் தீபிகாவின் கேரியர் உச்சம் தொட்டு வருவது பாலிவுட்டையை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிரபாஸ், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜக் கே படத்துக்காக 18 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம் தீபிகா. இதுவரை படத்தின் பட்ஜெட்டுக்கேற்ப 8 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கிவந்த தீபிகா, இப்போது 18 கோடி என ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X