இரண்டாவது முறை கர்ப்பம்.. குட் நியூஸ் சொன்ன தீபிகா படுகோனே!
மும்பை: பாலிவுட் ரசிகர்களுக்கு தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியான உடன், சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை தீபிகா படுகோனோ இன்று (ஏப்ரல் 19) காலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் 'Dua' கர்ப்ப பரிசோதனை கிட் ஒன்றை கையில் பிடித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "Dua பெரிய அக்கா ஆகப் போகிறாள்", "அருமையான செய்தி" போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

காதல் திருமணம்: தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் 'Goliyon Ki Raasleela Ram-Leela' படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினார்கள். அந்த படத்திற்கு பின் இவர்கள் இருவரும் சேர்ந்து பாஜிராவ் மஸ்தானி , பத்மாவத், 83 ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தனர்.பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் லேக் கோமோவில் உள்ள Villa del Balbianelloவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கொங்கணி மற்றும் சிந்தி மரபுகளை பின்பற்றி நடந்தது.
முதல் குழந்தை: திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீபிகாவிற்கு மகள் பிறந்தார். குழந்தைக்கு 'Dua' பெயர் வைத்துள்ளார். தற்போது தீபிகா படுகோனோ தனது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகி உள்ள இவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தீபிகாவின் நடிப்பில் 'Kalki 2898 AD மற்றும் Singham Again போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'King' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல ரன்வீர் சிங்
துரந்தர், துரந்தர் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'Pralaya' என்ற புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications