Deepika Padukone: திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்ற தீபிகா.. ரசிகர்களை கவர்ந்த வீடியோ!

சென்னை: பாலிவுட்டில் கலக்கலான கேரியரை கொண்டவர் தீபிகா படுகோன். ஆண்டுகளை கடந்தாலும் தன்னுடைய அழகு, நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்.

இந்த ஆண்டில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ஜவான், பதான் படங்கள் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன. இதனால் தீபிகாவின் மார்க்கெட் மற்றும் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ஃபைட்டர் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளது.

நடிகை தீபிகா படுகோன்: நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகாலம் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் இவரை காண முடிகிறது. தன்னுடைய அழகு, நடிப்பு, கவர்ச்சி போன்றவற்றால் தொடர்ந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். இந்த ஆண்டில் ஷாருக்கானுடன் தீபிகா இணைந்து நடித்திருந்த பதான், ஜவான் படங்கள் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன.

Bollywood actress Deepika Padukone visits Tirupati with her sister and Family

அடுத்தடுத்த வெற்றி: இந்த இரு படங்களும் கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்து தன்னுடைய கேரியரை சிறப்பாக்கி வருகிறார் தீபிகா படுகோன். அடுத்ததாக ஹிருத்திக் ரோஷனுடன் தீபிகா இணைந்து நடித்துள்ள ஃபைட்டர் படம் வரும் ஜனவரியில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பதியில் தீபிகா படுகோன் சாமி தரிசனம் செய்துள்ளார். மலை அடிவாரத்திலிருந்து நேற்றைய தினம் 3.30 மணிநேரம் பாதயாத்திரையாக சென்ற தீபிகா படுகோன் இன்று தன்னுடைய வழிபாட்டை மேற்கொண்டார்.

திருப்பதிக்கு தீபிகா பாதயாத்திரை: இதையொட்டி தீபிகா படுகோன் பாதயாத்திரையாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் பயணத்தில் தீபிகாவுடன் அவருடைய சகோதரி அனிஷா மற்றும் பெற்றோரும் இணைந்திருந்ததை பார்க்க முடிந்தது. அலிப்பிரி பாதையில் இவர்களது நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. வழியில் இருந்த முக்கியமான இடங்களிலும் தீபிகா விளக்கேற்றி தன்னுடைய வழிப்பாட்டை மேற்கொண்டதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.

திருப்பதியில் சாமி தரிசனம்: இந்நிலையில் இந்த பாதயாத்திரையை முடித்துக் கொண்டு இன்று காலை அவர் தன்னுடைய சாமி தரிசனத்தை செய்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் அதிகமான ஷேரிங்கையும் பெற்று வருகின்றன. இதன்போது சந்தன நிற உடையில் தீபிகா அழகாக காணப்பட்டார். இந்த பயணத்தில் அவரது கணவர் ரன்வீர் சிங் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நாயகி: தீபிகா படுகோன் பல ஆண்டுகளை கடந்து தொடர்ந்து தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துவரும் தீபிகா, ஹாலிவுட் ரேஞ்சில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார். அந்த வகையில் ஷாருக்கானுடன் தீபிகா இணைந்து நடித்து இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் படங்களில் அவரது கவர்ச்சி தூக்கலாகவே காணப்பட்டது. திருமணமான நிலையில், இவரது மார்க்கெட்டை அசைக்க யாராலும் முடியவில்லை என்பதே நிதர்சனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X