'ஹனிமூன்' போக நேரமே இல்லை: நடிகை தியா மிர்சா
மும்பை: பாலிவுட் நடிகை தியா மிர்ஸாவுக்கு தேனிலவை கொண்டாட நேரம் இல்லையாம்.
பாலிவுட்டின் சமத்து பிள்ளை என்று தியா மிர்ஸாவை கூறலாம். அந்த அளவுக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவர் தனது நீண்ட நாள் காதலரான சாஹில் சங்காவை கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி டெல்லியில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிவிட்டது தேனிலவை கொண்டாடாமல் வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு தியா கூறுகையில்,

புதுமணத் தம்பதி தேனிலவுக்கு செல்ல வேண்டும் என்று மக்கள் நினைக்கலாம். நாங்களும் திட்டமிடுகிறோம். ஆனால் நானும், சாஹிலும் வேலையில் பிசியாக உள்ளோம். வேலையை ரசித்து செய்கிறோம். அதனால் தற்போதைக்கு பிரேக் எடுப்பது பற்றி நான் நினைக்கவில்லை.
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அழகாக உள்ளது. திருமணமானதால் கூடுதல் பொறுப்பு எதுவும் வரவில்லை. ஏனென்றால் நாங்கள் இருவரும் முன்பே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுவிட்டோம்.
குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி முடிவு செய்தால் நிஜமான பொறுப்பு எங்களை வந்து சேரும் என்றார்.


Click it and Unblock the Notifications











