டோலிவுட்டுக்கு கை கொடுக்கும் பாலிவுட் நடிகைகள்.. ஆனால், கோலிவுட் பக்கம் வந்தாலே துரதிர்ஷ்டம் தான்?

சென்னை: பான் இந்தியா படங்கள் உருவாக்க வேண்டும் பெரிய வசூலை அள்ள வேண்டும் என்றால் முதலில் வில்லன் கதாபாத்திரத்துக்கும், ஹீரோயின் ரோலுக்கும் பாலிவுட்டில் இருந்து ஆட்களை பிடித்துப் போட்டால் போதும் என்கிற மைண்ட் செட்டில் தான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் உள்ளனர். அதை தாண்டி மல்டி ஸ்டார்கள் படங்களில் ஊருக்கு ஒரு பெரும்புள்ளியை தட்டித் தூக்கிப் போட்டு ரஜினிகாந்த் படங்கள் உருவாகி வருவதை போல படங்களையும் எடுத்து வருகின்றனர்.

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தில் தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி என 2 பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தனர். ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் டோலிவுட்டுக்கு அறிமுகமானார்.

kiara advani janhvi kapoor heroine

இப்படி வரிசையாக பாலிவுட் நடிகைகளை டோலிவுட் திரையுலகம் அதிகமாக களமிறக்கி ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை குவித்து வருகிறது. ஆனால், அதே பிளானை கையில் எடுத்த சில கோலிவுட் படங்கள் சமீப காலமாக மரண அடி வாங்கி வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

kiara advani janhvi kapoor heroine

சவுத் டு நார்த்: தென்னிந்திய நடிகைகளான சமந்தா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் என வரிசையாக பல நடிகைகள் பாலிவுட் படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். தென்னிந்திய ரசிகர்களின் மார்க்கெட்டை கவர அவர்கள் போட்ட அதே திட்டத்தை தான் டோலிவுட் படங்களும் பாலிவுட் நடிகைகளை தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பஞ்சு மிட்டாய் போல காட்டி பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

kiara advani janhvi kapoor heroine

பாலிவுட் நடிகைகள் அணிவகுப்பு: ஆலியா பட், திஷா பதானி, தீபிகா படுகோன், ஜான்வி கபூர் என வரிசையாக பல பாலிவுட் நடிகைகளை டோலிவுட் பக்கம் இறக்கி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், தற்போது ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் கியாரா அத்வானியை களமிறக்கியுள்ளனர். ஏற்கனவே அவர் மகேஷ் பாபுவின் பரத் எனும் நான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானியை பார்த்தாலே கிக்கேறும் என எஸ்.ஜே. சூர்யாவே பேட்டியளித்துள்ளார்.

kiara advani janhvi kapoor heroine

பல்பு வாங்கும் கோலிவுட்: அவன் போட்டு இருக்க அதே கலர் சட்டை, அதே தானடா என கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களும் இயக்குநர்களும் பாலிவுட் நடிகைகளை களமிறக்கினாலும் கடைசியில் மிஞ்சுவது என்னவோ ஃபிளாப் படங்கள் தான் என்கின்றனர். வலிமை படத்தில் ஹூமா குரேஷி நடித்தும் அந்த படம் ஓடவில்லை. ஊர்வசி ரவுத்தேலாவை லெஜண்ட் படத்தில் களமிறக்கியும் எந்த பயனும் இல்லை. கடைசியாக கடந்த ஆண்டு கங்குவா படத்தில் திஷா பதானியையும் அனிமல் வில்லன் பாபி தியோலையும் களமிறக்கினாலும் இதுக்கு பாபி சிம்ஹாவையே போட்டிருக்கலாமே என்கிற ரேஞ்சுக்குத்தான் படத்தின் ரிசல்ட் வருகிறது என நெட்டிசன்கள் பாலிவுட் நடிகைகளை கோலிவுட் நம்பி இனியும் ஏமாற வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். தமிழ் சினிமா நடிகைகள் நடிக்கும் படங்களே இங்கே சிறப்பாக ஓடி வருவதால் நம்ம ஊர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தந்தாலே போதும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X