சரியான நபருக்காக காத்திருக்கிறேன்.. திருமணத்திற்கு எந்த அவசரமும் இல்லை.. அஜித் பட நடிகை உருட்டு!
சென்னை : சரியான நபருக்காக காத்திருக்கிறேன் என்று அஜித் பட நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
ஷார்ட்ஸ், டி டே, பத்லாபூர், ஹை வே, ஒயிட், பெல் பாட்டம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ரஜினியின் காலா படத்தில் : மாடல் அழகியான ஹூமா குரேஷி இந்தி, மராத்தி, ஆங்கில மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். அந்த படத்தில். மீட்டாத வீணை பாடலில் அட்டகாசமான அழகுடன் இருப்பார்.
அதிரடி ஆக்ஷன் : காலா படத்திற்கு பிறகு இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் அஜித்திற்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளை தரமாக செய்திருந்தார். வலிமை படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தாலும், எந்தவிதமான பாடல் காட்சியும் இல்லாததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். இவரின் கவர்ச்சியான ஆட்டத்தை எப்படியாவது தமிழ் படத்தில் பார்த்துவிடவேண்டும் என தமிழ் ஆடியன்ஸ் தவம் கிடக்கின்றனர்.

ப்ரேக் அப் : இந்நிலையில், முடாசர் அசிசை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ஹுமா குரேஷி தற்போது அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தார். ஆனால், பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்த இவர்கள் கடந்த சில நாட்களாக ஜோடியாக தென்படவில்லை. இருப்பினும், ப்ரேக் அப் குறித்து இதுவரை எந்தவிதமான உறுதியான தகவலும் வரவில்லை.
சரியான நபருக்காக காத்திருக்கிறேன் : இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹூமா குரேஷி, திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் சரியான நபருக்காக காத்திருக்கிறேன். அதுபோன்ற நபரை சந்தித்தால் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வேன். தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு நடிப்பதால், நானும் அதை செய்வேன் என்றார். மேலும் பலர் திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்டு வருகின்றனர். திருமணம் தொடர்பாக எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றார். இவரின் இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் முடாசர் அசிஸ் ப்ரேக் அப் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும், நல்லா உருட்டுங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











