‘வலிமை‘யில் அஜித் முரட்டு சிங்கிள்?... சீக்ரெட் தகவலை வெளியிட்ட இயக்குனர் !

சென்னை : வலிமை திரைப்படத்தில் ஹுமா குரேஷி நடித்து வரும் கதாபாத்திரம் குறித்து சூப்பரான தகவல் தற்போது கசிந்துள்ளது.

இத்தனை நாளாக அவங்கதான் ஹீரோயினு என்று கூறி வந்தார்கள். ஆனால், இப்போதுதான் உண்மை தெரியவந்துள்ளது.

இந்தக் கதாபாத்திரம் ஹுமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹுமா குரேஷி

ஹுமா குரேஷி

பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிரம்பிய இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்திற்கு பிறகு ஹுமா குரேஷிக்கு பட வாய்ப்பு தமிழில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

என்னது தோழியா?

என்னது தோழியா?

ஆனால், காலா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் வரவில்லை. தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஹுமா குரேஷி அஜித்துக்கு நெருங்கிய தோழியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்துக்கும் அவருக்கும் எந்த காதல் தொடர்பான காட்சிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

பைக் சேஸ்

பைக் சேஸ்

இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், அஜித் மற்றும் ஹுமா குரேஷிக்கு இடையே சில காதல் வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், கொரோனா தொற்று காரணமாக கதையில் சில மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், பைக் சேஸ் காட்சிகளை மட்டுமே செய்வேன் என்று அஜித் தெளிவாக கூறிவிட்டதால், காதல் காட்சிகள் ஏதும் இல்லை என்று கூறினார்.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

அதே போல ஆயிரம் பைக்குகளை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்த ஒரு காட்சியை கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் வெறும் 100 பைக்குகளை வைத்து எடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது. வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X