Ileana D'Cruz : கல்யாணம் ஆகாமலே கர்ப்பமா? இலியானா போட்ட போட்டோவால் குழம்பிய ரசிகர்கள்!

சென்னை : நடிகை இலியானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இலியானா.

கவர்ச்சியான நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் இலியானா தமிழ், தெலுங்கு, இந்தி என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Bollywood Actress Ileana D’Cruz announced her pregnancy on social media

நடிகை இலியானா : ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் இலியானா அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக அந்த படத்தில் ''தம் இருக்கா மாமு'' என்று கேட்டு ஒட்டுமொத்த ஆடியன்ஸ் மனதையும் வளைத்துப் போட்டார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முன்னணி நடிகை : இதையடுத்து, படவாய்ப்பை தேடி தெலுங்கு பக்கம் போன அம்மணிக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. போக்கிரி, ஜல்சா, தேவதாஸ் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பல விருதுகளையும் வென்று நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். மேலும், மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

Bollywood Actress Ileana D’Cruz announced her pregnancy on social media

மும்பையில் செட்டிலானார் : டோலிவுட்டை கலக்கிய இலியானா பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கினார். அங்கும் தனது கிளாமரான நடிப்பால் இந்தி ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த இலியானா, ரன்பீர் கபூருடன் இணைந்து பர்ஃபி திரைப்படத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார். அறிமுகமான முதல் படமே வசூலை குவித்ததால், தொடர்ந்து மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு இவர் தமிழுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

காதல் கிசுகிசு : பாலிவிட்டில் செட்டிலானான இலியானா, கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கிலை காதலித்து வருவதாகவும் அவருடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இந்த செய்தி குறித்து இலியானா இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சம்மதம் போன்று இருந்து வருகிறார்.

குழம்பிய ரசிகர்கள் : இந்நிலையில் இலியானா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் குட்டி உடையை பதிவிட்டு, விரைவில்... என் சிறிய அன்பே இனியும் உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த போதும், சில ரசிகர்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை என்றும், கர்ப்பமாக இருக்கிறீர்களா என்றும், கல்யாணம் ஆகாமலே கர்ப்பமா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X