பிரபல நடிகரின் அப்பாவுடன் ஜோடி போடும் விஜய் பட ஹீரோயின்... யாரு கூடன்னு பாருங்க!

சென்னை: நடிகை இலியானா அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான இலியானா 2006ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தெலுங்கில் தேவதாசு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து தனது கணக்கை தொடங்கினார் இலியானா.

விஜய்யுடன் நண்பன் படம்

விஜய்யுடன் நண்பன் படம்

இதனை தொடர்ந்து கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்தார் இலியான. இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

அன்ஃபேர் அண்ட் லவ்லி

அன்ஃபேர் அண்ட் லவ்லி

தெலுங்கில் அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ள இலியானா, இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட்டில் பர்ஃபி படத்தின் மூலம் அறிமுகமான இலியானா தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இலியானா தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் நடித்துள்ளார்.

பழைய பிகினி போட்டோ

பழைய பிகினி போட்டோ

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள இலியானா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் தனது பழைய பிகினி போட்டோக்களை வெளியிட்டு கதறவிட்டார் இலியானா.

 நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக

நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக

இந்நிலையில் இலியானா தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

Recommended Video

அழகிய TV SISTERS |ANCHOR DHEEPTHI CHAT | FILMIBEAT TAMIL
இலியானாவுடன் பேச்சு வார்த்தை

இலியானாவுடன் பேச்சு வார்த்தை

ஆனால் தற்போது நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காஜல் அகர்வாலுக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகையான இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

சமந்தாவின் மாமனார்

சமந்தாவின் மாமனார்

நடிகை இலியானா, நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். நாகார்ஜுனா பிரபல தெலுங்கு நடிகர்களான நாக சைதன்யா, அகில் அக்கினேனி ஆகியோரின் அப்பா ஆவார். மேலும் நடிகை சமந்தாவின் மாமனார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X