ஜான்வி கபூரை வருத்தப்படுத்திய வார்த்தைகள்.. உபயோகிக்க வேண்டாம் என கோரிக்கை!
மும்பை : நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட கோலமாவு கோகிலா படம் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் வெளியானது.
ஜான்வி கபூரை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018ம் ஆண்டில் தடாக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இஷான் கட்டருக்கு ஜோடியாக ஜான்வி நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவரும் ஜான்வியின் நடிப்பில் கடந்த ஆண்டில் மைலி மற்றும் குட்லக் ஜெர்ரி போன்ற படங்கள் ரிலீசானது.

கடந்த ஆண்டில் இரண்டு படங்கள்
இந்த இரு படங்களும் ஓடிடியில் ரிலீசானது. இதில் குட்லக் ஜெர்ரி படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் ரீமேக்காக வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஜான்வியின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.

நெபோடிசம் குறித்த விமர்சனங்கள்
பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகளான ஜான்வி கபூர், நெபோடிசம் உள்ளிட்ட பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவதூறு கருத்துக்களுக்கு பதிலடி
சமீபத்தில் ஆர்யாவுடன் பையா 2 படத்தில் ஜான்வி இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் உண்மையல்ல என்று போனிகபூர் தெளிவுப்படுத்தினார். இந்நிலையில், தன்னைப்பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு ஜான்வி கபூர் தனது சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார்.

குறைகளை கண்டுபிடிப்பதில் உறுதி
நாம் என்ன செய்தாலும் நம்முடைய குறைகளை கண்டுபிடிப்பதிலேயே சிலர் உறுதியாக இருப்பதாக ஜான்வி கூறியுள்ளார். இத்தகைய குறைகளை கூறுவதன்மூலம் தங்களை தலைப்பு செய்திகளில் இடம்பெறுமாறு அவர்கள் செய்து வருவதாகவும் ஜான்வி தெரிவித்துள்ளார்.

வலியை ஏற்படுத்தும் விமர்சனங்கள்
தனது பலம் மற்றும் பலவீனங்கள் தனக்கு தெரியும் என்று கூறியுள்ள ஜான்வி, கடந்த தனது இரு படங்கள் மூலம் தன்னுடைய வாய்ப்புகளை சோதிக்க விரும்பியதாகவும் ஆனால் முடியாத விஷயங்களை ஏன் சோதிக்க வேண்டும் என்று பலரும் கேள்வி கேட்பதாகவும் அது தன்னைப் போன்றவர்களுக்கு வலியை ஏற்படுத்துவதாகவும் ஜான்வி தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமாக கமெண்ட் செய்ய கோரிக்கை
தன்னுடைய வேலையை பாராட்டி ஆக்கப்பூர்வமான கமெண்ட்ஸ் செய்பவர்களை தான் மதிப்பதாகவும் தன்னுடைய நடிப்பை மேம்படுத்த அவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்பட விரும்புவதாகவும் ஜான்வி தெரிவித்துள்ளார். ஆனால், மற்றவர்களின் மகிழ்ச்சியை பறிக்க விரும்பும் வகையில் பேச வேண்டாம் என்றும் ஜான்வி கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











